பக்கம் எண் :

ஒழிபியல்245

மார்பு(1-40-143), முலைக்கச்சு (1-40-144), பஞ்சகௌவியம் (1-40-266), அரசனுக்குப் பிழைசெய்தோர் தம்முடைய அளவுள்ள பொற்பாவை யொன்றைச் செய்வித்து அவன் சினத்தைப் போக்குதல் (1-40-371,4), நெற்கதிரை மகளிர் சூடுதல் (1-42.68), காவிதிப்பட்டத்துக் கறிகுறியாகக் கொடுக்கப்படும் பொற்பட்டம் (1-42-174), கயல் வடிவாகச் செய்த வெற்றிலைப்பை (1-47-175), எலிமயிராற் செய்யப்பட்ட பூத்தொழிலையுடைய போர்வை(1-47-179), தென்னங் கள்ளும் தேனாற் சமைத்த கள்ளின் தெளிவும் (2-2-177), அரசன் சிங்காசனத்தில் வீற்றிருந்து முடி புனையுமிடத்துப் பட்டத்துத் தேவியும் உடனி்ருத்தல் (2-4-24), அரசிலைபோல் பொற்றட்டாற் செய்யப்பட்ட ஆபரணம் (2-7-73), மணிகள் இழைத்த மோதிரம் (2-12-74), தன்பெய ரெழுதின மோதிரம்(3-9-70), பவழத்தாற்செய்த குமிழையுடைய பொன்னாலாகிய மிதியடி (3-22-202), சித்திரங்கள் எழுதப்பட்ட உயர்ந்த மாடங்கள் (4-3-35), கணவனைப் பிரி்துறையும் மகளிர் கூந்தல் புனையாமை (4-7-103), யானைத்தந்தத்தாற் செய்த வெண்பூக்கோவைகள் (4-14-64), புலிமுக மாடம் (4-15-108).
9. ஐங்குறுநூற்றா லறியப்படுவன:
     இடையர் கரும்பு குணிலாக் கனியுகுத்தல், இளமகளிர் தும்பைமாலை யணிதல், பொய்ம்மைப்புலி காவலுக்கு வைக்கப்படுதல், குரங்கு மூங்கிலிலேறி விளையாடுதல், சுரஞ்செல்வோர் பலவின் கனியை அருந்திச் செல்லல், பரத்தையைத் தேரேற்றி வருதல், பரத்தையரோடு தலைமகன் புனலாடல், மகளிர் இடையில் பொற்கா சணிதல், மகளிர் பந்தாடுதல், மகளிர் எரி புகுதல், முதலை தன் பிள்ளையைத் தின்னுதல்.
10. சிலப்பதிகாரத்தி லறியப்படுவன:
     அந்தியில் மகளிர் மலரையும் அறுகையும் நெல்லையும் மங்கலமாகச் சிந்துதல், ஆனைமேற் பறையறைதல், இரண்