பக்கம் எண் :

246தமிழகம்

டாஞ் சாமத்திற் கண்ட கனா எட்டுமாதத்திற் பலிக்குமென்பது, தேவாசுரயுத்தம் பதினெட்டாண்டிலும், இராமராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும் முடிந்ததென்பது, இறந்தவர்களை உத்தேசித்துத் தானஞ் செய்தல், இறைவன் சூடிய பிறை இரண்டு கலைத்து என்பது, உயிர்ப்பலி யுண்ணும் மயிர்க்கண் முரசு, எண்ணெண்கலையோர் (வேசையர்), எழுநிலை மாடம், கடையில் இன்ன சரக்கு ஈண்டுள்ள தென்று அறிவிக்கக் கொடிகளெடுத்தல், கலங்கரை விளக்கம், கற்புடைய மகளிர் இருக்கும் நாட்டில் மழை பெய்யு மென்பது, சஞ்சீவி நான்கு வகை-சல்லிய கரணி, சந்தான கரணி, சமனிய கரணி, மிருத சஞ்சீவி, சந்திரன் கோயில், சூரியன் கோயில், களவு நூல், தெய்வத்தைப் பூவும் புகையும் சாந்தும் கண்ணியும் கொண்டு வழிபடுதல், நூலேணி, புலிப்பல்லைத் தாலியாகக் கட்டுதல், பொதிகளின்மேல் அளவு, எண், நிறை பொறிக்கப்பட்டிருத்தல், யானைப்பிடரியில் மகளிரை யேற்றி நகர்க்கு மணத்தை யறிவித்தல்.

27. மதுரை

(2000 வருடங்களுக்குமுன்)

     "திரு வழுதிநாடென்னுஞ் சிறப்புப் பெயர் பெற்ற பாண்டிமண்டலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பெரியோரால் வரையறுக்கப்பட்ட ஐவகை நிலங்களும் பொருந்தி இனிது விளங்கும். குறிஞ்சி நிலத்திலே இஞ்சியும் மஞ்சளும் மிளகும், வெண்சிறுகடுகும் தோரை நெல்லும் ஐவன நெல்லும் வெகுவாய்ப் பல்கி யிருக்கும். குறத்தியர் தினைக்கிளி கடியும் ஓசையும், கானவர் அவரை மேயும் ஆமாவைக் கடிகின்ற பூசலும், பூக்கொய்யும் மகளிர் புலி, புலியென்று கூறுமொலியும் மாறிமாறி ஒலியா நிற்கும். முல்லையின்கண் எள்ளிளங்காயும் வரகின் கதிரும் ஒருபால் முற்றியிருக்கும். ஒருபால் சிறுதினை கொய்வர். அங்கு மிங்குமாழ்ந்த குழிகளில் இரத்தினங்கள் கிடந்து