னது இடைவிடாதோடுகின்ற வையையாற்றினைப் போன்றிருக்கும். வாயிலைக் கடந்த மாத்திரத்தில், அகன்ற தெருக்களும் அவற்றின் இருபுறத்திலும் சாளரங்கள் பல வமைந்தனவாய் உயர்ந்து தோன்றும் வீடுகளும், ஆறும் அதன் இருகரையும் போல விளங்கும். | "அங்காடித் தெருவிலே, கோயில்களுக்கு விழாக்களை நடத்திக் கட்டின அழகிய கொடிகளும், தண்டத்தலைவர் பெற்ற வெற்றியின் பொருட்டு எடுத்த சயக்கொடிகளும், கட்கடைகளில் கள்ளின் களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடிகளும் இன்னும் பலவாய் வேறுபட்ட கொடிகளும் பெரிய மலையிடத்து அருவிகள் அசையுமாறுபோல அசையாநிற்கும் யானையுந் தேரும் புரவியும வீரரும் ஆகிய நாற்பெரும் படைகள் பல்காலும் வருவனவாய் மீள்கையினாலே, பூ விற்பாரும் பூமாலை விற்பாரும் சுண்ணம் விற்பாரும் வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்புடனே விற்கின்றவர்களும் தம் இன்னுயிரஞ்சி ஏங்கியிருந்து, மாடமாளிகை கூட கோபுரங்களின் குளிர் நிழலிலே இருந்து இளைப்பாறுவார்கள், கிழப்பெண்டிர் பண்ணியங்களை நறும்பூவுடனே ஏந்திச் சென்று மனைகடோறும் மனைகடோறும் உலாவி விற்பர். | "மாலைப் பொழுதில் விழாக் காணச் செல்வர்கள், பட்டுடுத்து உடைவாள் தரித்து மாலைதாங்கித் தேர்களின் மீதேறிக் காலாட்கள் புடை சூழ்ந்துவரக் குதிரைகளைச் செலுத்திச் செல்வர். அத் திருவிழாக்களைப் பெண்கள் அரமியத்தலத்தினின்றுங் காண்பர். அங்கே கட்டிய கொடிகளின்மீது மந்தமாருதம் வீசுதலால் அம்மகளிர் முகங்களானவை மேகத்திலே மறையுஞ் சந்திரனைப்போல ஒரு காற்றோன்றி ஒருகால் மறையும். | "புத்த மதத்தினராகிய பேரிளம்பெண்டிர் சிறு பிள்ளைகளை எடுத்துக்கொண்டு, தங் கணவரோடு பூசைக்கு வேண்டும் பூவினையும் தூபங்களையும் கைகளில் ஏந்திச் | | |
|
|