சென்று வணங்கும் பௌத்தப் பள்ளிகள் ஓரிடத்துக் காணப்படும். Êசிறந்த வேதங்களை ஓதி, யாகாதி கருமங்களைச் செய்து, பிரமந் தாங்களேயாய், வீட்டின்பத்தை இவ்வுலகிலே தானே அடைகின்ற பிரமவித்துக்களிருப்பிடம் ஒருபால் புலப்படும். ஒருபால், முக்கால ஒழுக்கமும் மூவுலகின் செய்தியும் முழுதுணரும் சமணமுனிவர்கள் உறைகின்ற அமணப்பள்ளிகள் கட்புலனாம். அப்பால் அறங்கூறவையமும், அமைச்சரிருக்கையும் அழகுற விளங்கும். | "சங்குவளை கடைவாரும், மணிகளைத் துளையிடுவாரும், பொற்கொல்லரும், பொன்வாணிகரும், ஆடைவிற்பாரும், சித்திரக்காரரும் பிறருங் கூடி அந்திக்கடையில் நெருங்கி நிற்பர். அறக்கூழ்ச்சாலையில் பலாப்பழம் வாழைப்பழம் முந்திரிகைப்பழம் முதலிய பழங்களையும், பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் முதலான காய்களையும், இலை கறிகளையும், கண்ட சருக்கரைத் தேற்றையும், இறைச்சிகளையுடைய சோற்றையும் கிழங்குகளுடனே பாற்சோறு பால் முதலியனவற்றையும் கொண்டுவந்து பசி தாகங்களினால் வருந்துவோர்க்கும் தரித்திரர்க்கும் இடுவார்கள். இக்கூறிய பலவிடங்களிலும் எழுகின்ற ஓசையானது அந்திக் காலத்தில் பல்வேறு பறவைகள் கூடிய இடத்து எழுகின்ற ஓசையின் தன்மையதாகும். | "பொழுது சாய்ந்தபின் ஆடல் பாடல் முதலிய பல்வகைத் துறைகளில் அவ்வவர் பொழுதைக் கழிப்பர். முதல் யாமஞ் சென்றபின் கடைவிற்பார் கடைகளை யடைத்தும், பண்ணியம் விற்பார் அவற்றின் பாங்கரும் படுத்துறங்கத், திருநாளின்கண்ணே கூத்தாடுங் கூத்தர் அஃதொழிந்து துயில் கொள்ள, ஒலி நிறைந்தடங்கின கடலையொக்கப் படுக்கையிலே துயில்கொள்வோர் இனிதாகக் கண்வளர்வர்............பின்பு வைகறையாமத்தில், அந்தணர் வேதம் ஓதுவர். யாழோர் நரம்பை இனிதாகத்தெறித்து மருதத்தை வாசிப்பர். பண்டம் விற்பார் தம் கடைகளை மெழுகுதலைச் செய்வர். கற்புடைய மகளிர் துயிலுணர்ந்தெழுந்து | | |
|
|