"நாங்கள் பூர்வகுடிகள் என்பதில் குறைவான எண்ணம் வைத்திராவிட்டாலும் நாகரிகத்தை எல்லாத் திசைகளிலும் பரப்பியதும் மக்கட் சாதியார் தோன்றிப் பெருகி வேறு நாடுகளிற் செல்வதற்கு ஏதுவாயிருந்ததுமாகிய ஒரு கண்டம் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்ததென நம்பினாலும் தமிழர் ஊழிக்காலத்துக்கு முற்பட்டவர்கள் என்பதில் சந்தேகம் தோன்றமாட்டாது. | இப்போதுள்ள நூல்கள் மூன்று முறைகளில் தமிழகத்தின் தென்பகுதியைக் கடல்கொண்டதாகக் கூறுகின்றன. பழைய சாலடியா பாபிலோனியா முதலிய நாடுகளில் பழைய நாகரிகத்தின் அறிகுறிகள் பழைய நூல்களில் காணப்படுவன போலத் தென்னிந்தியாவில் ஏன் காணப்படவில்லை யென்பதற்குச் சமாதனஞ் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழர் எழுதுவதற்குப் பயன்படுத்திய பனையோலை காலத்தில் ஒடிந்து அழிந்து போவதற் கேதுவாயிருந்தது என்பதை அதற்கு ஒரு சமாதானமாகக் கூறலாம்."-பேராசிரியர் சுந்தரம் பிள்ளை. | இந்தியர், பாரசீகர், கிரேக்கர், ரோமர், சிலாவியர், கெல்தியர், செர்மனியர் முதலானோர் ஒரு காலத்தில் ஒரே இடத்தில் வாழ்ந்தவர்கள் என மாக்ஸ்முல்லர் என்னும் பண்டிதர் கூறுகின்றனர்.1 |
| India, Chaldea, Babylon Media, Greece, Scandinavia, China among the Jews and the Keltic tribes of Britain the legend is absolutely identical in all essentials. Now turn to the west and what do we find? The same story presented in its every detail - presented among the Mexicans (each tribe having in its version) the people of Guatemala, Honduras, Peru and amongst every tribe of north American Indians; It is puerile to suggest that mere coincidence can account for this fundamental identity - The story of Atlantis - W. Scott Elliot p. 16. | 1. "When the ancestors of the Indians, the Persians, the Greeks, the Romans, the slaves, the Celts and the Germans were living together within the same enclosures may under the same roof"- Lectures on the science of language delivered in 1861, Maxmuller. | | |
|
|