பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை27

6. தமிழர் தொன்மை அகவல்

"ஒண்மை யறிவு மோர்வுமிக் கோரே
உண்மை கேண்மின்! உண்மை கேண்மின்!
மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள்
ஆன்ற பாண்டிய ரனைவருந் தமிழர்
தென்கட் பஃறுளி யாறு சீர்சால்

5

நற்புகழ் வடக்கண் நளிரிமை யார்மலை
உரைதமிழ் நாடா வயங்கிய முற்கால்
திருவிட மெனும்பே ரதற்குச் சிறந்தது
பின்னா ரியர்கள் பிறங்கிந் நாட்டில்
உன்னி வந்துகுடி யுறுமுன மிங்குத்

10

 தமிழ்மொழி வழக்குந் தகையொண் ணூலும்
இமிழிசை யைந்திணை இனமுந் தேவும்
போற்றுவர் யார்க்கும் பொதுச்சிவக் கோளும்
ஆற்றருந் தளியு மகத்தெண் ணெழுத்தும்
நயமிகு மொழுக்கமும் நனிச்சீர் தேற்றமும்

15

 உயிர்த்திருந் தனவற முயற்றர சிருந்தது
மற்றிவை யாவும் வான்றமிழ்ப் புலவர்
சொற்ற மொழிகள் தொகைப்படு வேதம்
ஆகமம் புராணம் மவரிதி காசம்
வாகய லார்சொல் மருளி லாங்கிலங்

20

 கற்றவர் கற்பொறி கவின்பந் தாக்கர்
தத்தர் முன்னையர் தம்முரை வழியால்
துணியப் பட்டன--தோன்றீ ரினத்தில்
இணங்கா நாற்குல மியற்றினர் பின்னோர்
என்று மொருதலை விவையுள்

25

மன்னி யுணர்ந்து மயக்கொழி வீரே."

 -விருதை. சிவஞான யோகிகள்.