பக்கம் எண் :

28தமிழகம்

7. குமரிநாட்டில் தமிழ் வழங்கிய தென்பது

"முன்னிருந்த பாலி மொழியுங்கீர் வாணமும்
துன்னுங் கருப்பையிலே தோய்வதற்கு -- முன்னரே
பண்டைக்காலத்தே பரவைகொண்ட முன்னூழி
மண்டலத்திலே பேர்வளநாட்டின் -- மண்டுநீர்ப்
பேராற் றருகில் பிறங்கு மணிமலையில்
சீராற்றுஞ் செங்கோற்றிறற் செங்கோன் -- நேராற்றும்
பேரவையிலே நூற்பெருமக்கள் சூழ்ந்தேத்தப்
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி"1
என்னும் தமிழ்விடுதூது தூதினால் பாலி கீர்வாணம் (ஆரியம்) முதலிய மொழிகள் தோன்றுவதற்குமுன் குமரிநாட்டில் சீரும் திருத்தமும் பெற்று விளங்கியது செந்தமிழ் மொழி யெனப் புலனாகின்றது. இறையனார் அகப்பொருளுரை, சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லாரெழுதிய உரை, குமரிநாடு கடல்வாய்ப்படுவதற்குமுன் பாடப்பட்ட சில புறநானூற்றுச் செய்யுட்கள், பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையேயுள்ள பெருவள நாட்டரசனாகிய தனியூர்ச் சேந்தன் பாடிய செங்கோன் தரைச்செலவு, அதன்கண் காணப்படும் பஃறுளி யாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் பாட்டு முதலியனவும் குமரி நாட்டகத்துக்குப் பண்டு வழங்கிய மொழி, தமிழ் என்பதை வலியுறுத்துகின்றன.

8. தமிழர் பிறநாடுகளிற் குடியேறுதல்

இந்து சமுத்திரத்தினூடே விளங்கிய பெரிய கண்டத்தின் பல பகுதிகள் கடல்வாய்ப் படுதலும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பலதிசைகளை நாடிச் செல்வாராயினர். இங்ஙனம் ஓரிடத்தினின்றும் பிரிந்துசென்று ஆசியா ஐரோப்பா ஆப்பிரிக்கா முதலிய நாடுகளிற் றங்கிய ஓரின மக்களே தமிழர் தொடர்பும் கூட்டுறவும் இல்லாமற்போகத் தாமுறைந்த நிலத்தியல்பு, வெப்பநிலை, குளிர், நடை.

1. மொழிநூல் மாகறல் கார்த்திகேய முதலியார்.