பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை29

உடை, ஊண், தொழில் வேற்றுமை முதலியவற்றால் பழக்க வழக்கங்களும் அவைபற்றிய சமயக் கோட்பாடுகளும் மாறித் தம்மை நாளடைவில் வேற்று மொழியினர் போலவும் வேறு கூட்டத்தினர் போலவுங் கருதினர். தாம் சென்று உறையும் நாடுகளின் வெப்பதட்ப நிலைகளுக்கேற்பக் கறுப்பு நிறமுள்ள சாதியார் வெண்ணிறமாகவும் வெண்ணிறமுள்ள சாதியார் கறுப்பு நிறமாகவும் மாறுதல் கூடும்.1
இவ்வுலகில் ஆங்காங்கு நாகரிக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய பண்டை மக்கட்சாதியாரின் சமயம், பழக்கவழக்கம் முதலியன பெரும்பாலும் ஒத்திருத்தலின், அச்சாதியார்களின் முன்னோர் ஓரிடத்தினின்றுஞ் சென்று வெவ்வேறிடங்களிற் குடியேறினார்க ளென்பது தெற்றெனத் துணியப்படுகின்றது.
எகிப்திய நாட்டில் தெறல்பஃறி (Der-el-Bahri) என்னும் ஊரின்கண் உள்ள அஷ்தாப் (Hastap) அரசியின் கோயிற் சுவரிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஓவிய எழுத்துக் கல்வெட்டுகளில் இவ் எகிப்தியர் தென் கடலகத்துக் குமரி நாட்டிலிருந்த பாண்டி2 (Punt) தேயத்திலிருந்து சென்று நீலாற்றங்கரைக்கட் குடியேறினர் என விளக்கமாகச்

     1. It is believed that under certain circumstances fair races may become dark, and dark races bright, the ventricle however being effected, sooner than the hair or the iris of the eyes" - Origin of the Arians - Taylor.
     2. This part of India could have been no other than the Malabar coast peopled by the Pandias which was probabaly called the land of the Pandias afterwards corrupted in Egypt into the land of punt. It would be interesting to note here that among the earlier students of the subject of the origin of the Egyptians Heeran was prominent in pointing out an alleged analogy between the form of the skull of the Egyptians and that of Indian races, he believed in the Indian origin of the Egyptians - Rig Vedic India,