சாலதியர் வழங்கிய மற்றொரு கடவுட் பெயரான முருகன் என்னுஞ் சொல்லும் தமிழ்க் கடவுளான முருகன் என்பதனோடு ஒற்றுமையுடையதாய்க் காணப்படுதலும் உற்றுணர்தற்பாலதாம். அல்லதூஉம் பகலவனை வழிபட்டுவந்த ஏதுவானோ அந்நாடு பாபிலோனியா என்னும் பெயர் பெறுதலானும், அது பண்டைத் தமிழர் உறைந்த நாடு என்பதைப் புலப்படுத்தும். |
"அமெரிக்காவிலே மெச்சிக்கோ யூகாற்றன் என்னுமிடங்களிற் காணப்படும் ஆலயங்களின் யழிபாடுகள் எகிப்திலுள்ள அவ்வகை யழிபாடுகளை ஒத்துள்ளன. அமெரிக்கா, எகிப்து, இந்தியா என்னும் ஆலயக் கட்டிடங்களிற் காணப்படும் அலங்கரிப்பும் கொத்து வேலைப்பாடுகளும் ஒரேவகையின. சுவரில் எழுதப்பட்டுள்ள சித்திரங்கள் சிலவும் ஒரேவகையின. அமெரிக்க மக்களிடையே தம் முன்னோர் சூரியன் உதயமாகும் நாட்டினின்றும் வந்தார்களென்னும் பழைய நம்பிக்கை உண்டு. அயோவா, தக்கோலா என்னும் தீவு மக்கள், `எல்லா அமெரிக்க மக்களும் சூரியன் உதயமாகும் திசையிலுள்ள ஒரு தீவில் ஒருமித்து வாழ்ந்தார்கள் எனக் கூறுவர்ழு என மேசர் லிந் என்பவர் கூறுகின்றார்"--அத்லாந்திசின் வரலாறு. |
1"பினீசியரின் பழைய கடவுள் வழிபாடும் தமிழருடைய சிவ வழிபாட்டோடு ஒற்றுமையுற் றிருக்கின்றது. அவர் ஞாயிற்றுக்குச் சாலப் பழைய பெயராக இட்டு வழங்கிய, `எல்ழு என்னுஞ்சொல் செந்தமிழ்ப் பழஞ்சொல்லாதல் கவனிக்கற்பாலது. அவர் சிவலிங்கம்போன்று நீண்டு தலைகுவிந்த கற்களை மலைமுகடுகளில் வைத்து வழபட்டு வந்தனர். மகமதியர் தம் கடவுளுக்கு இட்டு வழங்கும் பெயராகிய "அல்லா" என்னுஞ் சொல்லும் `எல்ழு என்னுந் தமிழ்ச் சொல்லின் திரிபே யாகுமென இதனுண்மையை |
|
1. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கிய "யூலியஸ் அபிரிகானுஸ்" (Julius Africanus) என்னும் சரிதாசிரியர் "பினீசியரின் 30, 000 ஆண்டுகளின் சரித்திரத்துக்கு ஆதாரமாகிய நூல்களிருந்தன" வென்று கூறியிருக்கின்றனர். |