ஆராய்ந்து கண்டார் கூறுகின்றனர். கிரேக்கர் ஒலிம்பஸ் என்னும் மனைமுகட்டின்மேல் வைத்து வணங்கிய சியஸ் என்னும் தெய்வம் சிவபிரானோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. சியஸ் என்பது சிவம் என்பதன் திரிபு என்பது ஆராய்ச்சி வல்லோர் கருத்து. சடைமுடி யுடையராயும் முத்தலை வேல் கையில் ஏந்தியவராகவும் சியஸ் என்னுங் கடவுள் கூறப்படுதல் இவ்வுண்மையை நிறுவும். அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென் தமிழ் நாட்டிலுள்ள கோயில் வடிவத்தைப் பெரிதொத்து நிற்றலும் கருத்தில் பதித்தல் வேண்டும். | வரிசை வரிசையாகக் கற்றூண்கள் நிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறு குளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும்) உள்ளே திருவுருவங்களி னெதிரே ஒரு பலிபீடமுமாக இரண்டு நெற்றிகள் தமிழ்நாட்டுத் திருக்கோயில்களி லுள்ளவாறே அமைத்திருக்கின்றனர். உரோமருடைய சூபிதர் வழிபாடும் தமிழர்களது சிவவழிபாட்டையே பெரும்பாலும் ஒத்திருக்கின்றது. "ஆங்கிலர் சர்மனியர்"என்னும் இருதிறத்தாருக்கும் முன்னோரான மக்கள் செய்துபோந்த தெய்வ வழிபாடும் தமிழ் மக்கள் செய்துபோதரும் வழிபாட்டோடு ஒப்புடைத்தாதலும் ஒரு சிறிது ஆராய்ந்துணர்தல் இன்றியமையாதாகின்றது. ஆங்கிலர் சர்மானியர்களுக்கு முன்னோர் தியுதோனியர் (Teutons). இவர் `Wodenழு எனப் பெயரிய கடவுளை இறைஞ்சிவந்தனர். . . . .இக்கடவுள் எல்லாக் கடவுளர்களுக்குந் தாயான ஒரு பெண்தெய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவ ரென்றும் ஞாயிற்றினைக் கண்ணாகவுடையராயும் உள்ளவரென்றும் சொல்லப்படுகின்றது...........இனித் தெய்வங்களை அவர்கள் காடுகளிலும் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். அவ்வாறு வழிபடுங்கால் முழுமுதற் கடவுளின் குறியாக ஒரு பெரிய மரத்தூணைத் திறந்த வெளியிலே நிறுத்தி அதனெதிரிற் பலிபீடமமைத்துத் தீ வளர்த்து வழிபாடாற்றிவந்தன ரென்பதூஉம் அவர் தம் பழைய வர | | |
|
|