பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை33

லாறுகளாற் புலனாகின்றது. இங்ஙனமே நம் முன்னோரும் திறந்த வெளியாகிய அம்பலத்தே இறைவ னருட்குறியாகிய தூண்வடிவான ஒரு தறியை நிறுத்தி அதனெதிரே ஒரு பலிபீட மெழுப்பி வழிபட்டுப் போந்தாரென்பதற்கும், நம் முன்னோரும் காடுகளிலும் தோப்புகளிலும் இத்தகையவாம் பல அம்பலங்களில் இறைவனைப் பண்டுதொட்டுத் தொழுதுபோந்தா ரென்பதற்கும் திருமறைக்காடு, திருவாலங்காடு, தில்லைவனம், கடம்பவனம், திருவானைக்கா என்னும் பெயர்களும் உறுசான்றாமென்க. தூண்வடிவு, தறிவடிவு, கற்குழவி வடிவு, குவிந்த புற்றின் வடிவு முதலியன வெல்லாம் சிவலிங்கவடிவமே யாதலு முணரற்பாற்று.
"கிறித்துவ மறையின் முதற்பாகத்தில் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்கு, `எலோகிம்ழு என்னும் பெயரே நனி சிறந்ததாய்ச் சாலப் பழையதாய் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. இச்சொல் `எல்ழு என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக் கிறித்துவ வேத ஆராய்ச்சி வல்ல புலவோர் உரை கூறுகின்றனர். . . . . கிறித்து சமயத்துக்கு முன்னோரும் முதல்வனை ஒரோவிடங்களில் எல்எலியன் என்றும் வழங்கி வந்தமையினை உற்றுநோக்குங்கால் அவருங் கடவுளை ஒளிவடிவினன் என்றே கருதி வழிபட்டமை புலனாகா நிற்கும். ........ஈண்டு காட்டிய இவ்வரலாற்றில் எல்சடை என்னும் பெயரிற் கண்ட சடையென்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறப்புப் பெயராகத் தமிழ்நாட்டில் வழங்கும் சடையன் என்னுஞ் சொல்லும் ஒன்றாயிருத்தல் பெரிதும் நினைவுகூரற் பாலதாகும்."
"மேலும் யாக்கோப்பு என்னும் அடியவர் இறைவனருளை நேரே பெற்று அவனைத் தொழுகுறியாக ஒரு குவிந்த கல்லினை நிறுத்தி அதன்மேல் எண்ணெயைச் சொரிந்து அதனைப் `பீத் தெல்ழு அல்லது முதல்வனிருக்குமிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமையும், ஆன் என்னும் ஊரிலிருந்த பகலவன் கோயிலின் கண் ஆன் கன்றினை (நந்தியை) இரசவேல் மரபினர் வழி
த-3