பட்டமையும், பலிபீடங்களின் மேலே குன்றாத் தீவேட்டு வழிபட்டமையும் இரசவேல் மரபினர் குமாரர் ஒளிவடிவின் அடையாளமான குவிந்த மணிக்கற்களை மார்பிற் கட்டிக் கொண்டு இருந்தமையும் (சிவலிங்கதாரணம்) ஆராய்ந்து பார்க்கும் நடுநிலையாள ரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னோர் செய்து போந்த முதற் கடவுள் வழிபாடும் தமிழ்நாட்டினர் செய்துபோதரும் சிவவழிபாடும் ஒன்றேயா மென்பதும் உணராமற் போவாரோ?"
"ஒரு காலத்தில் நமது தமிழ்மொழி உரோமாபுரி முதலான தேசங்களிலும் பரவியிருந்தது போன்று சைவ சமயமும் அன்னிய நாடுகளெல்லாம் பரவியிருந்ததாகத் தெரிகின்றது. கீழ்க்காணும் தேசங்களில் சிவாலயங்கள் இன்னுங் காணக்கிடைப்பதால் தகுந்த சாட்சியமாகின்றது.
"வட ஆப்பிரிக்காக் கண்டத்து ஈஜிப்ட்; தேசத்திலுள்ள மெம்பீஸ் நகரத்தில் நந்திவாகனன் திரிசூலன் சாம்பவாக்ர சர்ப்பாம்பரதாரியான பரமேசுவர விக்கிரகமும், பாபிலோன் பட்டணத்தில் 120 அடி உயரமுள்ள சிவலிங்கமும், ஹைட்டோபோலீஸ் என்னும் பட்டணத்தில் 60 அடியுள்ள சிவலிங்கமும், மெக்காவில் ஸகமக்கேஸ்வர நாமமுள்ள ஒரு சிவலிங்கமும் ஸம்ஸம் என்னும் கிணற்றில் ஒரு சிவலிங்கமும் இருக்கின்றன. ப்ரஜில் (பிரேசில்) தேசத்தில் அநேக சிவலிங்கங்களும், விக்னேசுரமூர்த்தங்களும், காரிந்த் பட்டணத்தில் பார்வதி தேவியின் ஆலயமும், கிளாஸ்கோவில் சுவர்ண கவசத்தினால் போர்க்கப்பட்ட ஒரு சிவலிங்கமும், பிரிஜியன் தேசத்தில் ஏடன் என்னும் சிவலிங்கமும், வினியா, யகோதி, சிதரால், காபூல், பலக்புகார் முதலான இடங்களில் அநேக சிவலிங்கங்களும் இருக்கின்றன. அங்குள்ள சனங்கள் பஞ்சாட்சர பஞ்சவீர என்னும் பெயரால் அழைத்தும் அர்ச்சித்தும் வருகின்றார்கள் என்று வீர சைவம் என்னும் மாதாந்தப் பத்திரிகை கூறுகின்றது." (சித்தாந்தம் மலர்-3. இதழ் 3.)