இங்கிலாந்திலுள்ள கிறித்துவ ஆலயங்களையும் மூலைமுடுக்குகளையும் கவனித்து நோக்கும்போது அது ஒரு சைவநாடு அன்று என்று கருத இடம் தரவில்லை எனச் சித்தாந்த தீபிகை என்னும் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார். |
விடியா என்னும் நாட்டில் ஒரு சமாதியின்மேல் ஒன்பதடிக் குறுக்களவுள்ள ஒரு சிவலிங்கம் இருக்கிறது. தமிழ் நாட்டில் சமாதியின்மேல் லிங்கம் தாபிக்கும் வழக்கினையே அந்நாட்டவரும் கைக்கொண்டனர் போலும். |
பாபிலோனிலே உள்ள கோயில்களில் தமிழ் நாட்டின் ஆலயங்களிலே காணப்படுவதுபோலத் தேவதாசிகள் இருந்தார்கள் எனச் சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். தமிழகத்தினின்றும் பெயர்ந்துசென்று பாபிலோனிற் குடியேறிய தமிழர் இவ்வழக்கத்தையும் உடன்கொண்டு சென்றார்கள் போலும். |
வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகிய மெக்சிகோ நகரத்தில் சந்திர சூரியர்களுக்கு ஆலயங்கள் இருந்தனவென்றும், மொண்டி சூமா அரசன் காலத்திலும் அக்கோயில்களில் ஆராதனை, திருவிழா முதலியன நடந்து வந்தன வென்றும் சரித்திரங்களிற் படிக்கின்றோம். |
"சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழவிருந்த மக்கட் சாதியாரைவிட வேறுபாடுடையனவாயிருந்தன. அப்படியே அவர்களுடைய மொழியும் செமித்தியர், ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்பந்தமில்லா திருந்தது. அவர்கள் திட்டமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாகத் தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக்கணக்கான ஆண்டு |
|
1. "Passing through the Churches and Cathedrals of London and meditating on the many semblances and traces of Saivaism that present before me in every nook and corner of England, it is impossible to think of England as anything else except a Saivite country." - Siddanta Depika. |