களுக்கு முன்னிருந்த திராவிட சாதி முன்னோரின் வடிவை ஒத்திருக்கின்றது. இன்றும் தக்கணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தியரைச் சுமேரியர் ஒத்திருக்கின்றனர். இந்தியாவினின்றும் தரைமார்க்கமாக அல்லது கடல்மார்க்கமாகச் சென்று பாரசீகத்துக் கூடாக தைகிரஸ் யூபிறாதஸ் என்னும் இரு நதிகளின் பள்ளத்தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர்களின் நாகரிகம் வளர்ச்சியுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல் கூடும். முதலில் ஓவிய முறையாகவும் அதிலிருந்து இலகுவாகவும் சுருக்கமாகவும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர். | அவர்கள் பாபிலோன் நாட்டை யடைந்தபோது சதுரமாகிய எழுதுகோலினால் மிருதுவான களிமண்ணில் எழுதி வந்தார்கள். இதனால் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப்பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுமேரியர் இந்தியரினத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கே நாகரிகப்படுத்துவதற்குச் சென்ற செமித்தியரும், ஆரியரும் அல்லாத சாதியார் இந்திய உற்பத்தியினரேயெனத் தெரிகின்றது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது; ஆகவே இந்திய நாகரிகமென்பது ஆரியருடையதன்று1 என டாக்டர் ஹால் என்னும் |
| 1. The ethnic type of Sumerians, so strongly masked in their statures and reliefs, was so different from those of the races which surrounded them, as was their language from those of the Semitics, Aryans or others. The face type of the average Indian of to-day is no doubt much the same as that of his Dravidian race ancestors thousands of years ago. Among the modern Indians, as amongst the modern Greeks or Italians the ancient pre-Aryan type of the land has (as the primitive of the land always does) survived, while that of the Aryan conqueror died out long ago and it is to this Dravidian ethnic type of India that the Sumerians bear most resemblance, so far as we can judge from his monuments. He was very like a southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is | | |
|
|