கப்பட்ட ஓவிய எழுத்துக்களைக் குறித்து எழுதி இருந்தவாறு இவ்வோரசைச் சொற்களைச் சித்திர எழுத்துக்களாக அமைத்தல் கூடும். கடல்வழியாகச் சென்று சுமேரிய நாகரிகத்துக்கு ஏதுவாக அசீரியாவில் தங்கினது சுமேரியருக்கும் தமிழருக்கும் முகவெட்டு ஒருவகையாக விருத்தல் தற்செயலாக ஏற்பட்டதன்று."1 |
"நாகரிகம் முதற்றோன்றிய விடம் தென்னிந்தியாவென்று சொல்வது ஆதாரமற்ற ஏட்டுக்கதையன்று. ஹால் (Dr. Hall) என்பவர் சுமேரியரின் உற்பத்தியைக்குறித்துக் கூறியது உண்மையாகவிருந்தால் நாகரிகம் முதல் இந்தியாவிற்றோன்றிப் பழந்தமிழர்களுக்கிடையே பழகினதென்பது நாட்டப்படும். பின் அது பாபிலோனின் நாகரிகத்தை உதயமாக்குவதற்குக் கொண்டுபோகப்பட்டது. மக்கள்நூல் வல்லார் ஒருவர் முற்பட்ட மக்கள் இந்து சமுத்திரத்துள் மறைந்த கண்டத்தில் உற்பத்தியானார்கள் எனக் கூறுகின்றனர். சர். வால்டர் ராலி2 என்னும் பண்டிதர் சலப்பிரளயத்துக்குப்பின் மக்கள் பல்கிய விடம் இந்தியாவென நவில்கின்றனர். சர் சான் எவான்ஸ் (Sir Johan Evans) தென்னிந்தியா ஆதி மனிதனுக்குப் பிறப்பிடமென அறைகின்றனர். (திராவிட இந்தியா. பக்கம் 59 - 60) |
சுவாமி விவேகானந்தர் சொல்வது :- |
மிகவும் புராதன நாகரிகமுடைய தமிழருடைய வாசத்தானமே சென்னை நகரமாகும். தமிழரின் ஒரு பிரி |
|
1. Dravidian India pp. 58, 69. 2.. Sir Walter Raleigh |
3. The madras Presidency is the habitant of a Tamil Race whose civilization was the most ancient. A branch of Tamil Race spread a vast civilization on the Euphrates in very ancient times whose Astrology, Religion, Love, Morals and rites etc. furnished the foundation of the Ariya and Babylonian civilization and whose mythology was the source of the Christian Bible. Another branch of them spread from the Malabar coast and gave rise to a wonderful Egyptian civilization and the Aryans are indebted to the |