பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை39

வினர் மிகப் பழைய காலத்தில் யூபிறாட்டிஸ் நதிப் பக்கங்களில் தங்களுடைய நாகரிகத்தைப் பரப்பினர். அவர்களுடைய சோதிடம், சமயம், காதல், நீதி, கிரியை முதலியன அசீரிய பாபிலோனிய நாகரிகத்துக்கு அடிப்படையாயிருந்தன. அவர்களுடைய பழங்கதைகள் விவிலிய நூலுக்கு ஆதாரமாக விருந்தன. தமிழரில் இன்னொரு பிரிவினர் மலையாளக்கரை வழியாகச் சென்று நூதனமான எகிப்திய நாகரிகத்தைக் கட்டி எழுப்பினார்கள். ஆரியர் இந்தச் சாதியாருக்குப் பலவகையில் கடமைப்பட்டவர்களா யிருக்கின்றனர். தென்னிந்தியாவிலுள்ள பிரம்மாண்டமான கோவில்கள் தமிழர்களின் கட்டிட மமைக்கும் கலைத் திறமையைத் தெரிவிக்கின்றன."
இன்னும் சுவாமி விவேகானந்தர் தமது இரண்டாம் மேற்றிசைப் பிரயாணத்தைக் குறித்து எழுதிய ஆங்கில நூல் ஒன்றில் `கருநிறமும் நீண்ட மயிரும் நேரிய மூக்கும் சரிவில்லாத கரிய கண்களும் உடைய ஒரு சாதியார் பூர்வ எகிப்திலும் பபிலோனியத்திலும் வசித்தார்கள். அச்சாதியார் இந்நாள்களில் இந்தியா முழுமையிலும் விசேடமாகத் தெற்குப்பக்கத்திலும் வசித்து வருகிறார்கள். ஐரோப்பாவின் சில பாகங்களிலும் இவர்களைக் காணக்கூடும். இவர்களே திராவிடர் எனப்படுவர்ழு என்று எழுதியிருக்கின்றார். (தமிழ் தொகுதி - 1 பகுதி 3ப. 19)
`எகிப்தியருடைய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது. அசுர் என்னும் பட்டணத்தைத் தலைநகரமாகக் கொண்ட அசுரேய நாட்டின் (Assyria) நாகரிகம் எகிப்திய நாகரிகத்துக்கு முந்தியது. இவ்வசுரேய நாகரிகத்தாலும் பாபிலோனிய நாகரிகத்தைப் பின்பற்றியது. பாபிலோனிய சீர்திருத்தம் சுமேரிய அக்கேடிய நாகரிகத்தின் வழி வந்தது. இங்குக் கூறியன யாவும் ஆராய்ந்து தாபிக்கப்பட்ட உண்மைகள். சுமேரிய அக்கேடிய நாகரிகத்துக்கும்

     race in many aspects. The colossal temples in South India proclaim the Engineering Art of the Tamil Race - Quoted in Prabuddha Bharatha, Sep. 1921.