தமிழ்நாட்டுப் பூர்வீக நாகரிகத்துக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிப் பிரபல பண்டிதர்களாகிய ஸர். எச். எச். ஜான்ஸ்டன், எச். ஜீ. உவெல்ஸ், உவில் விறடஸ்காவேன் பிளன்ற், ஹக்ஸ்லி இவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து எழுதுவாம். முன்னையோர் இருவரும் சொல்வது முன்னைய ஆராய்ச்சி முறையின் முடிபாகக்கண்டது; பிஷப் கால்டுவெல் பண்டிதருடைய கொள்கைக்கு மாறுபட்டது; யுத்திக்கு ஏற்றதாகத் தோன்றுகின்றது. அது வருமாறு:- உலகத்தில் முதன் முதற் கட்டிடங்களையும் பட்டணங்களையும் உண்டாக்கியவர்கள் சுமேரிய ரென்னும் சாதியார். இவர்கள் யூத வகுப்பு ஆரிய வகுப்பைச் சேர்ந்தவர்களல்லர்; எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. இவர்களுடைய பாஷை பலுசிஸ்தானத்தின் சில பாகங்களிலும் காக்கேசிய மலைநாட்டிலும் உள்ள பாஷைகளையும் ஸ்பானியாவில் ஒரு பக்கத்திற் பேசப்படுகிற பாஸ்க் என்னும் பாஷையையும் ஒத்திருக்கின்றது. இப் பாஷைகளெல்லாம் திராவிட மொழிகளொடு நெருங்கிய சம்பந்தமுடையன. சுமேரியர் கோபுரத்தோடு கூடிய கோயிலைக் கட்டினார்கள். நிப்பூர் என்னுமிடத்திலே தமது பிரதான தெய்வமாகிய எல்-லில் என்னுஞ் சூரியதேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தார்கள். | பின்னர் ஹக்ஸ்லி அவர்கள் சொல்வது:- எகிப்தியரும் திராவிடரும் ஒரே குலமுறையில் வந்தவர்களாக விருத்தல் வேண்டும். முன்னாளிற் கருப்பென்றும் வெள்ளையென்றுஞ் சொல்லக்கூடாத மங்கல் நிறத்தினராகியவரும் மிகவும் சீர்திருத்தமெய்தியவருமாகிய ஒரு சாதியார் ஐரோப்பாவில் இங்கிலாந்து பிரான்சு ஸ்பானியா என்னுமிவற்றிலும் மத்தியதரைக்கடலின் இருபக்கத்திலும், எகிப்திலும், இந்தியா முழுமையிலும், சீனதேசத்திற் பசுபிக் சமுத்திரக்கரையிலும், அமெரிக்காவிற் பீரு மெக்சிகோ ஆகிய இரண்டு நாட்டிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பங்களையும் சமயக்கொள்கைகளிற் சம்பந் | | |
|
|