பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை41

தப்படுத்தியும் இன்னும் இந்தியாவில் வழங்குகிற சுவஸ்திக் அடையாளத்தையும் அங்ஙனமே சமயக் கொள்கைகளிற் கொண்டும் வந்தார்கள் இவர்கள் கிறிஸ்தவாப்தத்துக்குப் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். அதுமுதல் கி. மு. ஆயிரம் ஆண்டுவரையும், அஃதாவது பதினாயிரம் வருடத்துக்கு இவர்களுடைய நாகரிகம் நிலைபெற்றிருந்தது; வடக்கிலிருந்து வந்த வெள்ளை நிறமுள்ள ஒரு சாதியார் இவர்களைத் துரத்திவிட்டார்கள். ஐரோப்பாவின் தெற்குப் பாரிசங்களிற் புதிய கற்காலத்தினராகிய இவர்கள் குறைந்தபடி பத்தாயிரம் வருடங்களுக்குத் தமது பாஷையைப் பேசிக்கொண்டு வந்தார்கள். ஆரியபாஷை வருதலும் இவர்களுடைய மொழி அருகி மறைந்து போயிற்று. சென்ற வருஷத்திற் `கிறீற்ழு என்னுந் தீவிலகப்பட்ட கற்சாசனங்களை யாராய்ந்த ஸர். எச். எச். ஜான்ஸ்டன் என்னும் பண்டிதர் கிறித்தவாப்தத்துக்கு மூவாயிரம் வருஷத்துக்கு முன்னுள்ள அச் சாசனங்களில் எழுதப்பட்ட மொழியும் திராவிட மொழியோடு தொடர்புடையதென்றார்.
உற்று நோக்கும்போது எகிப்தின் பிரதான நதியாகிய நீலநதி சுமேரிய தலைநகராகிய நிப்பூர் எல். வேல என்னுங் கடவுட் பெயர்கள் தமிழ்மொழியாக விருக்கின்றன. பின்னும் யவனமொழி எழுத்துக்களின் வடிவம் தமிழ் எழுத்துக்களோடும் கிரந்த லிபியிலுள்ள எழுத்துக்களோடும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. (செந்தமிழ் XX........10)
பாபிலோனியத்தில் எல். றாமார்த்துக் என்னும் பெயர்களையுடைய சூரியதேவன் அசுரேயத்தாரால் அசூர் என்னும் பெயரால் துதிக்கப்பட்டான். (அசூர் என்னும் பதத்திற் சூரியன் என்னும் பதத்தின் பிராதிபதிகந் தோற்றுவதும், றா என்னும் பதத்தில் ரவி தொனிப்பதும் எல்லென்னும் மொழி தமிழிற் பரிதியங்கடவுளுக்குரிய பெயராதலும் உற்றுநோக்கற்பாலன) இச் சூரிய தேவனோடு ஒப்புடைய தேவர் மூவருளர். அவர் அநு, வேல், எயா