பக்கம் எண் :

42தமிழகம்

என்னும் பெயரினர். மேலும் சிப், ஷாமஸ், உல் என வேறு திரிமூர்த்திகளும் உளர். சின் மற்றெல்லாத் தேவர்களினுஞ் சிறந்து விளங்கினார். இவர்கட்கு ஊர், போசிப்பா, பாபிலோன், கலா, தூர்சர்க்கினா முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்களமைந் திருக்கின்றன. ஆண்டின் மூன்றாம் மாதமாகிய கிவன் என்னும் மாதம் இவருக்கு உரியதாயிருந்தது. இளம்பிறைச் சந்திரன் இவருடைய இலச்சினை; இவ்வடையாளத்தினால் குறிக்கப்படுவர். அன்றேல் நீண்ட அங்கியணிந்த மானிட வுருவமும் சிரசில் மும்முடியும் முடியின்மீது பிறைச்சந்திரனுமுள்ள உருவமும் இவருடைய உருவமாகும். ஆசுரேய பாபிலோனிய காலதேய மனைத்தினும் படைத்தற் கடவுளுக்கு வேல் என்று பெயருண்டு. (செந்தமிழ் xx.....12)
வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கு மிடையில் கடல் கிடந்தபோது இருநாடுகளுக்கும் தொடர்ச்சி ஏற்பட்டிலது. அக்காலத்துத் தென் இந்தியாவினின்றும் மரக்கல வழியாக வட இந்தியாவை அடைந்த வணிகர் அங்கே தங்குவாராயினர். இவர்களிடமிருந்து ஆரியர் மரக்கலம் செய்யும் முறையைக் கற்றுக்கொண்டனர். இருக்கு வேதத்திலே சொல்லப்படும் பாணீஸ் (Panis) என்பவர்கள் தமிழ் வியாபாரிகளே. இவர்கள் தமிழ்ப்பாணர்களென்பது சிலர் கருத்து. வடநாட்டிற் றங்கியபின் அவர்களாற் றுரத்தப்பட்ட பாணீஸ் சோழமண்டலக் கரையிற் றங்கி அங்கிருந்து மரக்கல வழியாக பினீசியாவில் குடியேறினர். இவர்களே `Punic raceழு என மேற்றிசைச் சரித்திரக்காரராற் குறிப்பிடப்படுவோர். சோழமண்டலக் கரையினின்றும் சாலடியாவிற் றங்கினோர் சாலடியார்களென்றும், பாண்டியநாட்டினின்றும் சென்று எகிப்திற் றங்கினோர் எகிப்தியர்களென்றும் சரித்திரவல்லார் மொழிகின்றனர்.
"ஆரியரின் மிகப் பழைய நூலெனக் கருதப்படும் இருக்கு வேதத்திலும் பாணரைப்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அவர் கடலிலுங் காலிலுஞ் சென்று வாணிகஞ் செய்பவரென்றும்வகுப்பு வேற்றுமை பாராட்டாதவ