ராயினும் ஆரியர் கொள்கைக்கு உடன்படாதவரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. அவரைப் 1பாணூஸ் (Panis) என்று இருக்கு வேதங் கூறும். மேல்நாட்டிலக்கியங்கள் அவரைப் புயூனிக் குழுவினர் (Punic race) என்று கூறுகின்றனர். அவர்கள்தாம் சிரியாவின் பக்கத்திற் குடியேறிய பின்னர் பொனீசியர்கள் என்றழைக்கப்பட்டனர். பாணர் காந்தார கபூலிஸ்தான்வழியாக மேலாசியாவிற்கும் போண்டஸ் (Pontus) மாகாணம் பாஸ்போரஸ் நிலவொடுக்கம் (Isthmus of Bosphorous), இவைகளின் வழியாக ஐரோப்பாவிற்கும் பல பிரிவினராகச் சென்றனர். காந்தார கபூலிஸ்தான் வழியாகச் சென்ற பாணர் கீழ் அரேபியாக் கரையையும் பாபிலோனியாவையுந் தாண்டிச் சிரியாவின் வழியாகச் சென்று நிலைத்த நாட்டுக்குப் பொனீஷியா என்று பெயர்; பாணருடைய நாடு பொனீஷியா எனப்பட்டது. போசியன் குடாக்கரையி லிருந்தோர்கள் அவரைக் கடற் கடவுளென்று நினைத்து வணங்கினர். |
"பின்னும் பாணர் டைகிரிஸ் யூப்ரெட்டிஸ் ஆற்றுப் புறங்களுக்கருகே குடியேறி நாகரிகமாகிய விளக்கை ஏற்றினர். அவ்வாறேற்றப்பட்ட விளக்கிலிருந்து வட ஆசியாவெங்கு மொளி பரவிற்று. பாணர் குடியேறுவதற்குமுன் பொனீசியா லெபெனான் (Lebanon) என்ற பெயர் பெற்றிருந்தது. பொனீஷிய ரென்பவர் கிறித்து பிறப்பதற்கு முற்பட்டவரென்பது சூலியர் அபிரிக்கானசின் முடிவு. ஆகவே, பாண்டியரின் வரலாறு அதற்கு முற்பட்டதென்பது தெரியவரும். |
"இதற்குள்ளாக நிலத்தினமைப்புச் சிறிது மாறிற்று. பஞ்சாபிற்குத் தெற்கே இருந்த கீழ்க்கடலும் அரச பட்டணத்தை ஒட்டியிருந்த அரசபட்டணக் கடலும் `நாடு கடலாகும்; கடல் நாடாகும்; என்பதை யொட்டி மேடாயின. மரக்கல மோட்டப் பாணரிடங் கற்றுக் |
|
1. பாணீஸ் என்பது வணிகர் என்னும் தமிழின் திரிபு. பனை நாடென்பது பொனீசியா ஆயிற்றென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. |