பக்கம் எண் :

44தமிழகம்

கொண்டும் போதிய மரக்கல மில்லாதலால் கடல் கடக்க முடியாதிருந்த ஆரியருக்கு அப்பொழுது தென்னாடு நோக்கிப் போக முடிந்தது. ஆதலால் தமிழரது நாகரிகத்தைக் கற்றுக்கொண்டு மேன்மேலும் பெருகுவதற்கு அவரால் முடிந்தது. சோழமண்டலக் கரையிலிருந்த தமிழர் வடநாடு போந்த கடற்பாணரை ஒத்த நாகரிகத்தினர். அச்சோழர்கள் பாணருடன் சென்று ஒரு நாட்டிற் குடியேறினர். அக் குடியேற்ற நாட்டிற்குச் சோழநாடு அல்லது சாலிதியா (Chaldia) என்பது பெயர்.1 அந்நாட்டையே ஷைனார் நாடென்றும், (Shinar Land) பாபிலோனியா என்றுங் கூறுப. அங்குக் குடியேறியவருக்குச் சுமேரியர் என்று வேறு பெயருமுண்டு. பாபிலோனியாவிலே சுமேரியர் பிறந்தவர் என்று கூறுவதற்கு அந்நாட்டு மண்ணும் நிலமும் இடந்தரா. சாலதியாவிலுள்ள டெல்லா2 என்ற விடத்திலிருந்து அகப்பட்டுள்ள சில உருவங்களின் தலைகள் தமிழரின் தலைகளை ஒத்திருக்கின்றன. தமிழரது மொழியைப் போன்ற சுமேரியரது மொழியும் ஒட்டுச் சொற்களையுடையது. அச் சுமேரியர்தாம் பாபிலோனியாவிலும் அசீரியாவிலும் நாகரிகத்தை வளர்த்தவராவர். இருக்கு வேதத்திலும் சந்தனமரத்தைக் குறித்து யாதொரு குறிப்புங் காணப்படாததாலும், சந்தனமரம் மலையாளக்

     1. As the Cholas probably went there with their gods and priests called their colony `Chola-decaழு which word through corrupted pronunciation came to be known as Chaldia i.e. the land of Cholas. This land was the Shinar land of Semites and the Babylonia of the Greeks. - Rig Vedic India p. 20.
சோழநாட்டு மக்கள், தமது கடவுளரோடும் குருமாரோடும் தாம் சென்று குடியேறிய நாட்டுக்குச் சோழ தேசமெனப் பெயரிட்டிருக்கலாம். இச்சொல் உச்சரிப்பு வேறுபாட்டால் சால்தியா என மாறியிருத்தல் கூடும். சால்தியா என்பது சோழதேசம் என்பதன் சிதைவு. இந் நிலத்தைச் செமித்தியர் சின்னார் என்றும் கிரேக்கர் பாபிலோனியா என்றும் வழங்கினர். -இருக்குவேத இந்தியா. (பக்கம்-20)
     2. Telloh.