தமிழ்நாட்டின் தொன்மை நிலை | 45 |
கரையின் தனிப்பொருளாகையாலும் பாபிலோனியா இலக்கியங்களிற் காணப்படும் சந்தனம் தமிழராகிய சாலிதியராலேதான் கொண்டுபோகப்பட்டதென்று நினைக்க இடமுண்டு. மொழிபற்றிய இலக்கணமும் மண்டையோடு பற்றிய செய்திகளும் தமிழர்களுக்கும் சுமேரியருக்குமுள்ள தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. பாபிலோனியாவிலும் `பாம்பைழுத் தெய்வமாகக் கொண்டாடுவதினின்று அத்தொடர்ச்சி பசுமரத்தாணியாகின்றது. சோழர்கள் சாலிதியர்க்குச் சிற்ப வேலைகளைக் கற்பித்தனர். தென்னிந்தியாவினின்று சென்ற சேத்துக்கள் அல்லது சிரேஷ்டிகள் (Seths or Shrestis) என்போரே சாலிதியாவில் சேட்டுகள் (Saits)1 என்றழைக்கப்பட்டனர். அச்சேட்டுகள் (Saits) இன்றேல் சாலிதியாவின் கலைப்பெருக் கவ்வளவு மிகுந்திராதென்பது திண்ணம். மெசப்பட்டேமியாவி லெழுந்த இந்தச் சாதியாரின் நாகரிகம் பதினோராயிர மாண்டுகளுக்கு முற்பட்ட தென்ப. பாண்டியர்கள் பெர்சியா அரேபியா வழியாகச் சென்று எகிப்தில் குடியேறினர். அவர்கள் பண்டு நாட்டிலிருந்து2 வந்தவராக அந்நாட்டு வரலாற்றிலுங் கூறப்பட்டுள்ளது. பண்டு நாடென்பது பாண்டி நாடாகிய தமிழ்நாடே. எகிப்தியருடையவும் தமிழருடையவும் மண்டையோடுகள் ஒத்திருப்பதே போதிய சான்று. தமிழரைப்போலவே எகிப்தியரும் ஒவ்வொரு திங்களிலும் மலக்கழிவு மருந்தருந்தினர். பெரியோரை வணங்குதல் இருபாலரிடத்து முண்டு. உயிரினழிவிலாத் தன்மையில் இருபாலருக்கும் நன்னம்பிக்கையுண்டு. துன்பகாலத்திலும் பிரிவாற்றாமை நிகழ்ந்துழியும் தலைமயிரைக் களையாது வளரவிடும் வழக்க மிருவரிடமுண்டு. அம்மை அப்பன் என்ற பகுப்பு எகிப்தியரிடமுண்டு. புறவழுக்கு மிகுந்த உயிரென்று பன்றி தமிழராலும் எகிப்தியராலும் பன்னாளாக இகழப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எகிப்திய |
| 1. சேட்டுகள் என்போர் வியாபாரிகள் என்று சொல்லப்படுகின்றனர். ஆகவே, செட்டிகள் என்னும் தமிழ்ச்சொல் சேட்டுகள் எனத் திரிந்திருத்தல் கூடும். செட்டு-சேட்டு. | 2.. Land of Punt. | | |
|
|