பக்கம் எண் :

46தமிழகம்

ருக்கும் தமிழருக்குமுள்ள புணர்ச்சி யுண்மையைக் காட்டுகின்றன.
"இவ்வாறு தமிழராகிய பாண்டியரின் தொடர்பால் வந்த எகிப்தியருடைய நாகரிகமே உலகிற் பெரும்பாலும் பரவிற்று. எகிப்தியர் நாகரிகமே முதலிலெழுந்ததென்று சிலரும் பாபிலோனியரின் நாகரிகமே முற்பட்டதென்று சிலரும் கூறி வாதிப்பர். அவ்விருவர் நாகரிகமும் தமிழரான் வந்ததேயன்றி வேறல்லவென்பது பாண்டியர் குடியேறிய நாடே எகிப்தென்றும், சோழர் குடியேறிய நாடே சாலதியாவென்றும், சாலதியர் குடியேறிய மெசப்பொட்டேமியாவாகிய நாடே பாபிலோனியாவென்றும் வழங்கப்பட்டன என்றும் முற்கூறிப் போந்தவற்றால் விளங்காநிற்கும். பாணருடைய நாடே பொனீஷியாவென்றும் மேலே கூறப்பட்டது. இவ்வெகிப்தியரும் பாபிலோனியரும் பொனீஷியருமே கிரேக்கருக்கு நாகரிகங் கற்பித்தவர். கிரேக்கருக்குக் கற்பிக்கப்பட்டதைக் கிரேக்கரிடமிருந்து உரோமர் அறிந்தனர்.பின்னர் உரோமர் தாங் கற்றுக்கொண்டவற்றை ஐபீரியர், கெல்த்கள், தியூதர்கள், சிலேவர்கள்1 முதலானோருக்குத் தெரிவித்தனர். இவ்வாறே உலகெங்கும் தமிழரிடமிருந்து நாகரிகம் பரவிற்று. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு-7-பரல் 1.)
இதுகாறும் கூறியவற்றால் தமிழகத்தினின்றும் சென்ற மக்கள் இப்பூவுருண்டையின் பல பாகங்களிற் சென்று தங்கிப் பற்பல சாதியினர் என்னும் பெயரினைப் பெற்றார்களென்பது தெளிவுற விளங்கும்.

9. முதற்கண்தோன்றிய மொழி

தமிழ்நாட்டிலேயே மக்கட் படைப்பு முதற்க ணுற்றதெனத் தக்க பிரமாணங்களால் மேலே நிறுவப்பட்டது. ஆகவே, மக்கள் முதற் பேசிய மொழி தமிழ் என்பதுதானே பெறப்படும். ஒருமொழியின் அடியாகவே உலகில்

      1. Iberaians, Celts, Teutons and the Slavs.