பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை47

உள்ள பல மொழிகள் தோன்றியிருக்கின்றன வென்று மொழி ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் துணிகின்றனர். மொழி ஆராய்ச்சி வல்ல வண. நல்லூர் ஞானப்பிரகாசர் தமிழ்ச் சொற்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் திரிந்து வழங்கியிருக்கும் வகையினை யாவரும் எளிதிற்கண்டு மகிழுமாறு பத்திரிகைகள் வாயிலாகவும் புத்தக வாயிலாகவும் விளக்கியிருக்கின்றனர். சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உற்பத்தித்தானம் ஒன்று என்பது அவர் கருத்து.1 ஆரிய

     1. "That the roots of a large majority of Indo-European words are to be found in the ancient Tamil is not a mere theory, but a fact ascertained by extensive induction. it is not from the similarity of sounds and meanings alone that the redical identity of of words in the so-called Dravidan and Aryan languages was deduced." - Pedigree of Words. Rev.S. Gnanaprakasam.
[இந்திய ஐரோப்பிய மொழிச் சொற்களின் மூலங்கள் பல பழந்தமிழிற் காணப்படுகின்றனவென்பது, அனுமான அளவில் உள்ளதன்று; உண்மையே. இவ்வுண்மை பரந்த ஆராய்ச்சியினாற் கண்டுபிடிக்கப்பட்டது.-உச்சரிப்பு ஒற்றுமை பொருள் ஒற்றுமைகளால் மாத்திரமன்று இச் சொற்களின் ஒற்றுமை அறியப்படுவது. -வண-ஞானப்பிரகாசர்:]
     These first words os Tamil are also the long forgotten roots of most words in all the Indo-European languages. Tamil first words or roots take us back, thus to the remotest period of human history when only a few scores, or perhaps a few hundreds, of monosyllabic words without inflection, and Dravidian races. - Tamil Roots in Other Languages. Rev. S. G.
தமிழிற் காணப்படும் மூலச் சொற்கள் இந்து ஐரோப்பிய மொழியில் நீண்ட காலத்துக்கு முன் மறக்கப்பட்ட சொன் மூலங்களாகும். தமிழின் ஆதிச் சொற்கள் அல்லது மூலச்சொற்கள் நம்மை மக்கள் வரலாற்றின் பழங்காலத்துக்குக் கொண்டுபோய்விடுகின்றன. அக்காலத்தில் சில நூறு ஓரசைச் சொற்கள் மாத்திரம் ஒன்றொடு ஒன்று சேராது தனித்து வழங்கின. இச்சொற்களே ஆரிய திராவிட மொழிகளாயிருந்தன.
     "The primary monosyllabic words of Tamil carry us back to the very roots of language. The Sumerian speech