பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை49

மொழியும், விந்திய மலையின் கிழக்கு முனையிலுள்ள சூடிய நாகபுரியில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழியும் அம்மலையில் அம்பரமென்னுஞ் சிகரத்தில் (Mt. Abu) வசிப்பவர் தம் மொழியும், திபெத் நாட்டு மொழியும், பெலுசித்தான் தேசத்தில் தவுத்புத்திர என்னுஞ் சாதியார் பேசுகின்ற மொழியும், ஐரோப்பாக்கண்டத்துள் ஆஸ்திரியா நாட்டு மொழியும் பிறவும் தமிழின் சிதைவெனச் சரித வாராய்ச்சியில் வல்ல பெரியோர் கூறுவர். "தவுத்புத்திர என்பது திராவிட புத்திர என்பதன் சிதைவு." "ஆப்கானித்தான் என்னும் மகம்மதிய நாட்டில் ஒரு நகருக்குத் தமிழ் என்னும் பெயர் வழங்குவதோடு அந்நகரில் குடியேறிய மகம்மதியரும், தமது பாஷையோடு தமிழையுங் கலந்து பேசுகிறார்கள்."
"ஆசியாவில் சைபீரியா நாட்டில் அக்கீன் சாதியார் மொழியும், வட ஐரோப்பாவில் பின் சாதியார் மொழியும், மீட்டியா நாட்டிலுள்ள பிஹிஸ்டன் சாசனங்களில் எழுதியுள்ள மொழியும், திராவிட சம்பந்தம் பெற்றுள்ளன. பால்டிக் கடல் முதல் மலையாளம் வரையில் திராவிட சம்பந்தமாம். திராவிடம் தொன்றுதொட்டுள்ள தொன்று; ஆரியருக்கு முன் நாகரிகமடைந்தவர் திராவிடர்; வடபால் மேல்பாலுள்ள ஆஸ்திரேலியா தேசத்தாரது மொழியுள் நான், நாம், நீ, நீங்கள், அவ னென்னுஞ் சொற்க ளொத்துள்ளன; மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளுவம், குடகு, தோடம், கோட்டம், காண்டி, ஊரான் முதலிய பாஷைகள் தமிழ்ச் சிதைவு" என்று சரித்திரப் புலவர் ஹண்டர் என்பவர் கூறுவர்.

     southern limits of the 700 kathams of the Tamil land from Cape Comorin, and the language spoken in the numerous groups of islands between these two boundaries are allied to Tamil" (Indian Antiquary) Vol. x.) `The language spoken in Tascany in the Italy is a dialect of Tamilழு (J.R.A.S). `It is said that the Chinese has some affinity to itழு (T.P.P, 1913). `The three classic languages of the world viz. Sanskrit, Hebrew and Greek contain Tamil words in the Vocabularyழு - Rhys. Davidழுs: Tamil
India, p. 38.