"இன்னும் வடமொழிக்குத் தமிழ் முற்பட்டது" எனவும், "இத்தாலிய தேசத்திற் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழர்களுக்குச் சம்பந்தமான சாதியார்கள் இருந்தார்க" ளெனவும், அறிஞர் கால்டுவெல் கூறுவர். எட்வர்ட் க்ளார்டு1 என்பவர் தாம் எழுதிய யூதருடைய சரித்திரத்தில் மங்கோலியர், பினீஸ் இச்சாதியர்களுக்கு மூல புருடர்களாக இருந்தவர்கள், ஈழ நாட்டிலிருந்து பாரசீக வளைகுடாவைச் சூழ்ந்து குடியேறி யிருந்தார்கள் எனவும், சுமேரியரென்னும் சாதியாருக்கு முன்னும் எகிப்து தேசத்தார் தலையெடுப்பதற்கு முன்னும் அவர்கள் நகரங்களையும் இராசதானிகளையும் உண்டாக்கினார்களெனவும், அவ்விராசதானிக்கு ஊரெனவும், அவ்வூர் சோமசுந்தரக் கடவுளுக்கு உறையுளெனவும், வெற்றிவேற் குமரன் அவர்தங் கடவுளெனவுங் கூறுவர்." (மொழி நூல்-மா.கா. முதலியார்) | "தென்னாட்டுத் திராவிட மொழியிலிருந்து சப்பான் மொழி தோன்றிய"தென்று புங்கி உத்தமர் கூறுகின்றார். (லோகோபகாரி, அக்டோபர் 9, 1930) | புத்த இந்தியாவின் ஆசிரியராகிய (Prof. Rhys.) டேவிட் என்பவர் "வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக்கின்றன" எனக் கூறுவர். | "வேதபாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் ஒலி வேறுபாடுடைய வேறு மொழி ஒன்று இருந்திருக்கவேண்டுமென்றும், அம்மொழியிலுள்ள பல சொற்கள் வேதபாடல்களிற் கலந்திருக்கின்றன" வென்றும் (A.A. Macdonell) மக்டானெல் என்னும் பண்டிதர் கூறுவர். | டாக்டர் கால்ட்வெல் "அக்கா, அத்தை, அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, நீர், பட்டணம், பாகம், பலம், மீன், வள்ளி, முதலிய சொற்கள் சமக்கிருதத்தில் கலந்திருக்கின்றன" எனக் கூறுவர். | "பஞ்சாப் சிந்து பழமையை நோக்கியபின் பி. தி. சீனிவாச ஐயங்கார் கொண்டுள்ள உய்த்தறிவு உருசிகர |
| 1. Edward Claurd. | | |
|
|