பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை51

மானது. தனித் தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சியால் இந்தியாவின் புதிய தற்கால நாகரிகத்தை நன்கு அறிந்து கொள்ளலாமென்றும், முதற்பருவத்துள்ள தமிழ்ச் சொற்கள் ஓரசையினவா யிருத்தலின் ஜேர்யோன்மார்ஷல் குறிப்பிட்ட ஓவிய எழுத்துக்களை இப் பழந்தமிழ்ச் சொற்களால் எழுதிக் காட்டலாமென்றும், 20,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வழங்கிய மொழிகள், தமிழ் சம்பந்தமானவையென்றும், கோதாவரிக்குக் கீழ்ப்புறத்து வழங்கும் மொழி பழந்தமிழ் சம்பந்தமானதென்றும் அவர் கருதுகின்றனர். தற்காலம் வட இந்தியாவில் வழங்கும் வடமொழி சம்பந்தமாகிய மொழிகள் பழந்தமிழ் வழி வந்தனவும் மிகுதியும் சமக்கிருதப் போக்கைத் தழுவியனவுமாகிய மொழிகளே யென்பது ஐயங்காரவர்கள் கருத்து. (திராவிட இந்தியா-ப.78, 79)

10. சிந்துவெளித் தமிழர்

1922இல் பஞ்சாப் மாகாணத்திலே சிந்து வெளியில் `அரப்பாழு `மொகஞ்சொதரோழு என்னும் இரண்டு புராதன நகரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அந்நகரங்களிற் கிடைத்த எழுத்துப் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் பிற பொருள்களும் பழம்பொருள் ஆராய்ச்சியாளரால் நன்கு ஆராயப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட பழைய இந்திய வரலாறு என்னும் நூலில் பனேசி என்பார் கூறியிருப்பன வருமாறு:
"ஆரிய மக்கள் கி. மு. 2000 க்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை. இவர்கள் வருகைக்கு நெடுங்காலம் முன்தொட்டு இந்நாட்டில் உறைந்த தமிழரின் சீர்திருத்தத்துக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கிடைத்தனபோன்ற முத்திரைகள் எல்லாம், சுமேரியா முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன. மேற்கு ஆசியாவிலே தைகிரஸ் யூபிராதஸ் வெளிகளில் வாழ்ந்த மக்களுக்கும் சிந்து வெளியில் வாழ்ந்த மக்களுக்கும் சீர்திருத்த