பக்கம் எண் :

52தமிழகம்

முறை வாணிகம் என்பவைகளில் தொடர்பிருந்த தென்பதற்கு வேறு பல சான்றுகளும் உள்ளன.
பழைய சிந்து வெளிமக்கள் பயிரிடுவோராயிருந்தனர். அவர்களின் வாழ்க்கை ஒழுங்கு, அவர்களின் நன்றாயமைக்கப்பட்ட நகரங்களையும் கட்டிடங்களையும் கொண்டு அறியக்கிடக்கின்றது. கட்டிடங்கள் சூளையில் வெந்த களிமண் கற்களால் (செங்கல்) கட்டப்பட்டுள்ளன. மெசபொதேமியாவிலும் கிரேத்தாவிலும் போல வீடுகளுக்குச் சாளரங்களும், நிலைகளும் இருந்தன. தரைக்குச் சாந்திடப்பட்டிருந்தது. தண்ணீர் செல்வதற்குக் கான்கள் இருந்தன. வீடுகளுடன் குளிக்குமறைகள் இணைக்கப்பட்டிருந்தன. பலவகையான ஏனங்கள் செய்யப்பட்டன. செம்பு, தகரம், ஈயம், முதலியன பயன்படுத்தப்பட்டன. பொன், வெள்ளி,தந்தம், என்பு, நிறக்கற்கள் முதலியவைகளாலும் ஆபரணங்கள் செய்யப்பட்டன. சிந்துநதி நாகரிகம் கற்கால இறுதிக்கும் உலோக கால ஆரம்பத்திற்கும் இடைப்பட்டது. யானை, ஒட்டகம், நாய், இமிலும் குறுகிய கொம்புமுள்ள மாடுகள், 1ஆடு முதலியன வளர்க்கப்பட்டன. வாளி, கோதுமை, பருத்தி முதலியன பயிரிடப்பட்டன. நூல் நூற்று நெசவு செய்தல் முதலிய தொழில்கள் மிகத் திருத்தமடைந்திருந்தன. அங்குக் காணப்பட்ட மண்ணினாற் செய்யப்பட்ட உருவங்களும் இலிங்கங்களும் சிவ, துர்க்கை வணக்கங்களைப் புலப்படுத்துகின்றன. இவ்வளவு காலமும் எண்ணப்பட்டதிலும் பார்க்க இவ்வணக்கங்கள் மிகவும் பழமையுடையன என்று புலனாகின்றது. (ஜேர்யோன் மார்ஷல், ஹண்டர் முதலியோரும் பிற ஆராய்ச்சியாளரும் மொகஞ்சதரோ நாகரிகம் தமிழருடையதென அறுதியிட்டுக் கூறியுள்ளனர். இங்குக் காணப்பட்ட எழுத்துக்கள் சீன எழுத்துக்கள் போன்றன. ஒவ்வொரு சொல்லைக் குறிக்கவும் ஒவ்வொரு குறியீடு வழங்கப்பட்டது. இவ்வெழுத்துக்களினின்றும் பினீசிய வடசெமத்திய

     1. Prehistoric ancient Hindu India - R.D. Banerji.