பக்கம் எண் :

66தமிழகம்

         (5-37) ழுதென்றிசைக்குமரிழு (13-7) என வருவனவற்றிற்கு மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் குமரியாறு எனக் கூறிய உரையாலும், அடியார்க்கு நல்லார் காலத்திற் குமரியாறு கடல்வாய்ப் படவில்லை எனக் கொள்ளவேண்டி யிருக்கின்றது. அக்காலத்துக் குமரியாற்றைக் கடல்கொள்ளவில்லையாயின்,
ழுபஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ளழு
         எனக் கூறப்பட்டதினுள்ள குமரிக்கோடு என்பது மலையேயாயிருத்தல் வேண்டும்.
ழுநெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல்நாடுழு
         என்னும் சிலப்பதிகார அடிகளால் குமரியாறு கடல்கொள்ளப்பட்டதென விளங்குகிறது. ஆகவே, குமரித் தீர்த்தமென்பது குமரிமுனைக்கு அணித்திலுள்ள கடற் தீர்த்தமாயிருத்தல் வேண்டும். ஆகவே, பழைய நூல்களில்கூறப்படும் குமரி, கடல் அல்லது முனை எனப் பகுத்துணரக் கூடா வகையாயிருக்கின்றது.

1. செந்தமிழ் கொடுந்தமிழ்

ழுசெந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைசொற் கிளவிழு
         என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரையாசிரியர்கள் செந்தமிழ்நாடு ஒன்று, அதனைச் சூழ்ந்த கொடுந் தமிழ்நாடு பன்னிரண்டென உரைகூறினர். அப் பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலங்களாவன:
ழுதென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா அதன் வடக்கு--நன்றாய
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்.ழு
         (யாப்பருங்கலம் பழைய உரைமேற். நன். மயிலை 275மேற்.)