2"மன்ற வாணன் மலர்திரு வருளாற் றென்றமிழ் மகிமை சிவணிய செய்த
1. செந்தமிழ் நிலமாவது .........மருவூரின் மேற்குமாகிய "சோணாடு" என்று காரிகை உரையில் மாத்திரம் காணப்படுகின்றது.
2. இப்பாடல் யாப்பருங்கல உரை பதிப்பித்தவரால் பாடுவித்துச் சேர்க்கப்பட்டதெனச் `சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்ழு எனும் நூலிற் கூறப்படுகின்றது. காரிகை உரை முதற்பதிப்பில் "அமுதசாகரரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட யாப்பருங்கலக் காரிகை மூலமும் அதற்குக் குணசாகரரால் செய்யப்பட்ட உரையும் திருவாவடுதுறை யாதீன வித்துவான் தாண்டவராயசுவாமிகள், இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையரவர்கள், அஷ்டாவதான வீராசாமிச் செட்டியாரவர்கள் இவர்கள் முன்னிலையில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதரால் பிழையறப் பரிசோதிக்கப்பட்டு முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்தி;ல் பதிப்பிக்கப்பட்டன" பரிசோதிக்கப்பட்டன" என்று காணப்படுகின்றது. பின் 1908 ஆம் ஆண்டில் அம்மூலமும் உரையும் தமிழ்ப்பண்டிதர் கா. ர. கோவிந்தராச முதலியாரால் பரிசோதிக்கப்பெற்று வெளிவந்தது. இவ்விரு பதிப்புக்களிலும் `மன்றவாணன் மலர் திருவருளால்ழு என்னும் பாட்டுக் கானப்படுகின்றது.