பக்கம் எண் :

மொழி69

நச்சினார்க்கினியர். ஆங்கிலமொழியில் Provincialism எனப்படுவதே இத்திசைச் சொல்லுக்கு உதாரணமாகும்.1 இன்று கருதப்படுவதுபோல மற்றைய பன்னிரண்டு நாடுகளில் வழங்கிய மொழியிலும் பாண்டிய நாட்டு மொழி உயர்ந்ததென்ற பொருளன்று. அந்நாடுகளில் வழங்கிய மொழியும் பாண்டி நாட்டு மொழியை ஒத்த தாழ்வோ உயர்வோ உடையது. ஆனால் பாண்டி நாட்டில் வழங்கும் மொழி வழக்கை ஒட்டியே இலக்கியங்கள் செய்யப்பட்டன. மற்ற நாடுகளிலுள்ளவர்கள் பாடல்கள் செய்யும்போது அந்நாட்டுச் சொற்களையும் சேர்த்தார்கள். அச்சொற்கள் திசைச்சொற்கள் எனப்பட்டன, பாண்டி நாட்டு வழக்குப்படியே தமிழ்நாட்டு இலக்கிய வழக்கு இருத்தல் வேண்டுமென்பது அக்கால மக்கள் கொள்கை.
     தமிழ்நாட்டைச் சூழ்ந்து பதினேழு பிறநாடுகளும் உண்டு என முன்னோர் கூறியிருக்கின்றனர். இதை,
"சிங்களஞ் சோனகஞ் சாமகஞ் சீனந் துளுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம்
கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந்
தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்புவி தாமிவையே"
     என்னும் செய்யுள் அறிவிக்கின்றது. அராபியா வங்காளம் பர்மா சீனா யாவா ஒரிசா முதலிய நாடுகளைத் தமிழ்

     1. "This does not mean that the dialect of the Pandya country is superior to the dialect of the other twelve districts as it is usually understood to mean for one dialect is just as good or as bad as another, but that the literary dialect was first fashioned in the Pandya country and when this dialect was adopted for poetry in other tracts they allowed local words to find a place therein," - History of the Tamils, P. 151.
     2. "அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம், சிந்து சோனகம் திராவிடஞ் சிங்களம், மகதங் கோசலம் மராடங் கொங்கணம், துளுவஞ் சாவகம் சீனங் காம்போசம், பருணம்பப் பரமெனப் பதினெண் பாடை" எனப் பதினெண் பாடைகளின் பெயர்கள் திவாகரத்திற் காணப்படுகின்றன. பிற நிகண்டுகள் வேறுபடவும் கூறுகின்றன.