பக்கம் எண் :

70தமிழகம்

நாட்டைச் சூழ்ந்த நாடுகளாகக் கூறுவது பொருத்தமாகக் காணப்படவில்லை.
     சோழவந்தான் வித்துவான் அரசஞ் சண்முகனாரவர்கள் கொடுந்தமிழ் என ஒன்று தொல்காப்பியர் காலத்தில் இல்லை யெனவும், "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்" என்றது செந்தமிழ் வழங்கிய பன்னிரண்டு நிலமெனவுங் கூறுவர். அது வருமாறு:-
"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துந்
தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி"
     என்றாராகலிற், "கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டுளவெனவு மத்தமிழே திசைச் சொல்லாமெனவும் பெறப்படலானே, தமிழிருவகை யெனலு, மவை யிரண்டிற்கும் பொதுவெல்லை வேங்கடங்குமரி யெனலுஞ், செந்தமிழெல்லை வேறு கூறலு மமையுமெனி, னாசிரியர் பன்னிரு நிலமென்றதன்றிப் பன்னிரு கொடுந்தமிழ் நிலமெனக் கூறாமையானும் பிறாண்டுங் கொடுந்தமிழ் எனல் காணப்படாமையானும், `செந்தமிழ் சேர்ந்த பன்னிருநிலழு மென்றமையானது செந்தமிழ் வழங்கிய பன்னிரு தமிழ்நாடெனப் பொருள்படுமன்றிச் செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலமெனப் பொருள்படாமையானுஞ், செந்தமிழினின்றுஞ் சிதைந்து வழங்கு மொழியே கொடுந்தமிழெனி, ன்ஃதிழிந்தோர் வழக்காகலிற் கொள்ளப்படாமையானு, மத்தமிழினின்றும் பிறந்த பிறிதொரு மொழியெனி,னது துளுக் கன்னடந் தெலுங்கு மலையாளம் என்றாற்போல் வேறு பெயர் பெறலன்றிக் கொடுந்தமிழெனல் கூடாமையானு, மாண்டுச் செந்தமிழ் நிலமென்றது செந்தமிழியற்கையுந் திரிபுஞ் சேர்ந்த பன்னிரு நாடாகலானு மவ்வுரை பொருந்தாதென்ப."
     பண்டு இந்தியநாடு முழுமையும் ஐம்பத்தாறு நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்த தெனவும் அங்குப் பதினெண் மொழிகள் வழங்கினவெனவும் முன்னோர் கூறியிருக்கின்ற