பக்கம் எண் :

மொழி71

னர். `தேசமைம் பத்தாறிற் றிசைச்சொற் பதினேழும்ழு (தமிழ் விடு தூது).

2. பாண்டி நாடு

        இது காவிரிக்குத் தெற்கே மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி இந்த மூன்று பற்றுக்களும் (சில்லாக்கள்) அடங்கிய தேசம். இது வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியா குமரிக்கு வடக்கு, பெருவெளிக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கிலுள்ள நாடு என்று சொல்லப்படுகின்றது.
"வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவெளியாந்
தெள்ளாம் புனற்கன்னி தெற்காகும்-உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி."
        இதன் தலைநகரம் மதுரை. தாம்பிரபர்ணி (பொருநை)யின் முகத்துவாரத்தில் துறைமுகப் பட்டினமாகிய கொற்கை நகரம் சிலகாலம் இதன் தலைமைப்பட்டினமா யிருந்தது.

3. சோழநாடு

        சோழநாடு காவிரிக்கரையிலுள்ளது. அதன் தலைநகரம் திருச்சிராப்பள்ளிச் சில்லாவிலுள்ள 1உறையூர். காவிரியாறு கடலோடு சந்திக்கு மிடத்திலுள்ள காவிரிப்பூம்பட்டினம் அதன் துறைமுகமாக விருந்தது. கடலிலிருந்து பல கப்பல்கள் காவிரியில்வந்து தங்கினவென்று தெரிவதால் கடலோடு கலக்குமிடத்தில் அக்காலத்தில் ஆறு மிக அகலமாயிருத்தல் வேண்டும். அதன் பழைய எல்லைகள் வடக்கு திருப்பதி, தெற்கு வெள்ளாறு, கிழக்கு கடல், மேற்கெல்லை, காலத்துக்குக் காலம் மாறியதுண்டு. பெரும்படியாகப் பழனிக்கும் காரூருக்கும் நேராகவும் மேல் வடக்கே மைசூர் பீடபூமியின் கிழக்குப் பாதியை வெட்டும்படியாகவும் ஒருகோடு இழுத்தால் அது அதன் மேற்கெல்லையாகும்.

        1. புகார் பழைய தலைநகர்.