பக்கம் எண் :

72தமிழகம்

"கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம்--வடதிசையில்
ஏணாட்டுப் பண்ணை யிருபது நாற்காதஞ்
சோணாட்டுக் கெல்லையெனச் சொல்"
         கோட்டைக்கரைக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்கு வடக்கு ஆகிய எல்லைக்குட்பட இருபத்துநான்கு காதம் நிலப்பரப்புள்ள நாடு சோழநா டென இப்பாட லறிவிக்கின்றது.

4. சேரநாடு

         தற்காலத்துத் திருவனந்தபுரம் கொச்சி மலையாளம் கோயமுத்தூர் என்று வழங்கப்படும் ஊர்களும், சேலத்தினொரு பாகமுஞ் சேர்ந்து திரண்ட பகுதியே அக்காலத்துச் சேரநாடாகும். வடக்கிற் பழனி, கிழக்கில் திருச்செங்கோடு, மேற்கில் கள்ளிக்கோட்டை, தெற்கில் கடலாகிய எல்லைக்குட்பட்ட நிலமாகிய இந்நாட்டுக்கு இராசதானியாக இருந்த நகரம் வஞ்சி யென்றும் திருவஞ்சைக்களமென்றுங் கூறுவர்.
"வடக்குத் திசைபழனி வான்கீழ்தென் காசி
குடக்குத் திசைகோழிக் கோடாம்-கடற்கரையின்
ஓரமே தெற்காகு முள்ளெண் பதின்காதம்
சேரநாட்டெல்லையெனச் செப்பு.
         பழனிக்குத் தெற்கு, தென்காசிக்கு மேற்கு, கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, கடற்கரைக்கு வடக்கு ஆகிய இந்த எல்லைக்குட்பட்ட எண்பதுகாதம் நிலப்பரப்பு, சேரதேசமென்பது இப்பாட்டால் விளங்குகின்றது.

5. தொண்டைநாடு

         "ஆ தொண்டைச்சோழன். இவர் தந்தையாகிய மணிகண்ட சோழன் அல்லது குலோத்துங்க சோழன் ஒருநாள் வேட்டைக்கேகிய வனத்தில், ஒரு ரிஷி கன்னிகையாகிய