பக்கம் எண் :

மொழி73

       நாககன்னிகையை ஆதொண்டைப் பூமாலை சாத்தி காந்தர்வ விவாகஞ் செய்து கொண்டதனால் பிறந்தவர். இவர் தந்தை தனது இராச்சியத்தின் தென்பாகத்தை மகரிஷியான குமாரனுக்குக் கொடுத்தும் வடபாகத்தை ஆதொண்டருக்குக் கொடுத்தும் ஆளச் செய்தாராம். இவர் ஆண்ட பாகத்திற்குத் தொண்டைமண்டல மென்று பெயராகியது. இவர் தமது நாட்டில் வேளாளரைக் குடியேற்றிச் சிறப்பித்தபடியால் அவர்கள் தொண்டைமண்டல வேளாளர் என்னும் பெயர் பெற்றார்கள்." (தக்கண இந்திய சரித்திரம்).

அத் தொண்டைமண்டலத்தின் எல்லையாவன:-

"மேற்குப் பவளமலை வேங்கடநேர் வடக்கா
மார்க்கு முவரி யணிகிழக்கு-பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருபதின் காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு."

       இத் தொண்டைமண்டலத்திற்குக் காஞ்சிபுரம் தலைநகரம். "நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னிகையைப் புணர்ந்த காலத்து அவள் யான் பெற்ற புதல்வனை என் செய்வேனென்றபொழுது தொண்டையை (தொண்டை-கோவைக்கொடி) அடையாளமாகக் கட்டிக் கடலில் விட, அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பனென்று அவன் கூற, அவளும் புதல்வனை வரவிடத் திரை தருதலின் திரையனென்று பெயர் பெற்ற கதை கூறினார். (நச்சினார்க்கினியருரை-பெரும்பாணாற்றுப் படை.)

6. கொங்குநாடு

"வடக்குத்தலை மலையாம் வையாவூர் தெற்கு
குடக்குவெள் ளிப்பொருப்புக் குன்று-கிழக்கு
கழித்தண்டலை சூழும் காவிரிநன் னாடாம்
குழித்தண் டலையளவுங் கொங்கு."