வடக்கு--தலைமலை (இது மைசூருக்கும் சத்தியமங்கலத்துக்கு மிடையிலுள்ளது. சத்தியமங்கலம் கோயமுத்தூரின் ஒரு பகுதி [தாலூகா]. தெற்கு--வையாவூர் (இது பழனிக்கு இன்னொரு பெயர்): மேற்கு-வெள்ளியங்கிரி மலை. இது மலையாளத்துக்கும் கோயமுத்தூருக்கும் இடையிலுள்ள மலையின் பெயர் (North Palghat Gap), வடக்கு --காவிரி நீர்பாய்ச்சும் குழித்தலை. அமராவதி காவிரிச் சங்கமம் குழித்தலைக்குச் சில மைல்கள் மேற்கிலுள்ளது. இது கன்னடம் சேர்ந்த கொங்குநாடு. ஆதியில் கொங்குநாடு, கோயமுத்தூரும் சேலத்தின் தெற்குப் பாதியுமடங்கிய நாடாக விருந்தது. அது 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கன்னடரின் வெற்றிக்குப் பின் இதன் எல்லை இக்கால மைசூர் வரையும் அகற்றப்பட்டது. | 7. சிற்றரசர் நாடுகள் | சேர சோழ பாண்டியர்களை யன்றிக் குன்றுதோறுங் கோட்டைகளை வளைத்துக் கட்டி மூவேந்தருக்குக் கீழ்ப்பட்டும் படாதும் சிற்றரசு புரிந்த பல அரசர்களைக் குறித்துச் செய்திகள் பல, புறநானூற்றிற் காணப்படுகின்றன. அவ்வரசர்க்குரிய நாடுகள் சிற்றரசர் நாடுகளாம். | 8. பல்லவர், சாளுக்கியர் | பல்லவர்கள் காஞ்சி நகரைத் தலைநகரமாகக்கொண்டு கி. மு. 300 முதல் அறுநூறு ஆண்டுகள் வரையில் ஆண்டிருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் அப்பர் சம்பந்தர் சிறுத்தொண்டர் முதலிய சைவ அடியார்கள் விளங்கினார்கள். "தொண்டைமான் என்பதற்குச் சரியான சமக்கிருத மொழிபெயர்ப்பே பல்லவர்" எனச் சரித்திரக்காரர் கூறுகின்றனர். பல்லவர்களை வென்று காஞ்சியைக் கைப்பற்றிச் சிலகாலம் சாளுக்கியர் அரசு செய்தார்கள். மணிபல்லவம் எனப்பட்ட யாழ்ப்பாணத்துப் பண்டை நாக அரச பரம்பரையிலுள்ளோரே பிற்காலத்துப் பல்லவரெனப்பட்டனரென்பது ஒரு சாரார் கருத்து. | | |
|
|