யாகும். தொல்காப்பியனார் கூறிய `நோக்குழு முதலிய இன்றியமையாச் செய்யுளுறுப்புக்களை யொழித்துவிட்டுப் பிற்காலத்தார் யாப்பிலக்கணம் வகுத்ததும், பாட்டின் றன்மையறியாது, பிழைநெறியிற் பிறர் சொல்லுவதற் கேதுவாயிற் றென்க. இவற்றையெல்லாம் ஒதுக்கிச், சுருங்கிய சொற்களில் ஆழ்ந்து அகன்ற பொருள்களை யுடையனவாய், இயற்கைநெறி வழாதனவாய், உணர்வினை யெழுப்பி, மெய்ப்பாடு தோற்றுவிக்கும் சான்றோர் செய்யுட்களையே அறிவுடையோர் `பாட்டுழு என்று கொள்வாராவர். அத்தகைய பாட்டுக்கள்தாம் எண்ணிறந்தன வுள." (கபிலர் - ப்க். 84-87. பண்டிதர் ந. மு. வேங்கடசாமி நாட்டார்) | "தமிழ்மொழியிலுள்ள செய்யுளோசை அமைதியே பா வென்று பெயர் பெறுவதாம். ஒருவன் தொலைவிடத்திருந்து ஒரு பாட்டுப்பாட அப்பாட்டின் சொற்பொருள் இன்னவென்று புலப்படாவாயினும், அவ்வோசை வருமாற்றை உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் இன்ன பா வென்று அறியக்கிடக்கும். இங்ஙனம் நுண்ணிய விசும்பின்கண் அலையலையாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் ஓசையே பா வாகுமெனத் தொல்காப்பியச் செய்யுளுரையிலே பேராசிரியரும் நன்கு விளக்கினார். இவ்வாறு தோன்றிப் பரம்புஞ் செய்யுளோசையைத் தமிழாசிரியர் வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நால்வகைப் படுத்தினார். பின்னும் இந்நால்வகைப் பாவினோசையை நோக்குமிடத்து வெண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும் அடங்குவனவாம். இஃது `ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை-வெண்பா நடைத்தே கலியென மொழிபழு (தொல். செய். 208) என்றும், `பாவிரு மருங்கினைப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வென்ப வெண்பா வென்றாங், காயிருபாவினு ளடங்குமென்பழு (செய். 107) என்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுமாற்றான் விளங்கும். (பட்டினப்பாலை ஆராய்ச்சி--ஆசிரியர் மறைமலையடிகள்.) | | |
|
|