இவர்களையன்றி மந்திர வித்தைக்காரரும் வேடம் பூண்டோரு மிருக்கின்றனர். இவர்கள் தாமும் உயர்ந்த திருத்தமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். மறு உலகத்தைப் பற்றிய நினைவு அன்பையும் தூய்மையையு முண்டாக்குமென்று அவர்கள் கூறுகின்றனர். இவர்கள் சிலரிடமிருந்து பெண்கள் சமய சாத்திரங் கற்கின்றனர். பாடலிபுத்ரா கங்கையாற்றின் அகலம் 1 00 ஸ்ரேடியா, 1 அதன் குறைந்த ஆழம் 120 அடி. கங்கா நதியும் இன்னொரு ஆறும் கூடும் இடத்தில் பலிபோத்திரா என்னும் ஒரு நகர் இருக்கிறது. இதன் நீளம் என்பது ஸ்ரேடியா; அகலம் பதினைந்து ஸ்ரேடியா. அது நீண்ட சதுர வடிவமானது. அதைச் சுற்றி மரத்தினால் இடப்பட்ட அரண் உண்டு. அம்புகள் எய்யக்கூடியதாகச் சுவரின் இடையிடையே சந்துகள் செய்யப்பட்டன. சுவரின் முன்னே அகழி ஒன்று இருக்கின்றது. நகரின் கழிவுநீர் இதனுள் விழுகின்றது. இங்கு வாழ்வோர் இந்தியா முழுமையிலும் வாழ்வோரினும் சிறந்தோர். அரசன் தனது குடும்பப் பெயரோடு பலிபோத்திரா அல்லது சந்திர கோத்திரா என்னும் பெயரைச் சேர்த்துக்கொள்ளவேண்டும். அகழிகள் 600 அடி அகலமும், 30 முழ ஆழமுமுடையன. மதில் 570 கோபுரங்களும் அறுபத்துநான்கு வாயில்களும் உடையதாயிருந்தது.2 இந்திய மக்கள் சுதந்திர வாழ்க்கையினர். அடிமைகள் ஒருவரும் காணப்படவில்லை. 1. 606 அடி 9 அங்குலமுள்ள ஒரு கிரேக்க அளவை. 2. பழைய பபிலோனிய நகரங்களும் இந்திய நகரங்களும் வீடு வாயில்களும் ஒரே வகையினவென்று வரலாற்று நூலார் காட்டியிருக்கின்றனர். அக்காலப் பபிலோன் பட்டினத்தைப்பற்றிக் கெரதோதசு ஆசிரியர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது பின்வருமாறு:--"பட்டினம் நாற்சதுரமுடையது. அதன் ஒவ்வொரு பக்கமும் 120 ஸ்ரீடியா நீளமுடையது. நகரைச்சுற்றி ஆழமும் நீர் நிறைவுமுள்ள ஓர் அகழி செல்கின்றது. அதனை அடுத்து ஐம்பது அரசினர் முழம் அகலமுள்ள மதில் கட்டப்பட்டிருக்கின்றது. சாதாரண முழத்திலும் அரசினர் முழம் மூன்று அங்குலம் அதிகம். அதன் உயரம் இரு நூறு முழம். அகழியிலிருந்து எடுத்து மண்ணால் கல் அரிந்து சூளைவைத்து மதிற் சுவர்கள் கட்டப்பட்டன. மதிலின் உச்சியில் ஒன்றையொன்று பார்த்து நிற்கும் ஒரு மாடியுடைய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளின் நடுவில் வெளியிருக்கின்றது. இவ்வெளி ஒரு தேர் திரும்பக் கூடிய அகலமுடையது மதிலைச்சுற்றி நூறு வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலுக்கும் வெண்கலக் கதவிடப்பட்டிருக்கின்றது. அரண்மனை அகன்ற மதிலினாற் சூழப்பட்டிருக்கின்றது. அம்மதிலின் கதவுகளும் வெண்கலத்தாற் செய்யப்பட்டுள்ளன." 1. அக்காலப் பபிலோனிலும் இவ்வகை ஒழுங்கே இருந்தது. இது கெரதோதசு கூறுவதால் விளங்கும். அவர் கூறியிருப்பது:-- அரசன் ஆளும் தேசம் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அப்பிரிவுகள் அரசனுக்கும் அவனது பட்டாளத்துக்கும் தேவையான பண்டங்களை அளித்தன. இவைகளையன்றி அவை வழக்கமான திறையையும் இறுத்துவந்தன. பபிலோன் தேசத்திலுள்ள நாடுகள் ஆண்டின் நாலுதிங்கள்களுக்குப் போதுமானவற்றைஉதவின. ஏனைய மாதங்களுக்கு வேண்டியவற்றை ஆசியாவிலுள்ள ஏனைய நாடுகள் அளித்தன. அரசனிடம் 8000 ஆண் குதிரைகளும் 16,000 பெண் குதிரைகளும் இதே எண்ணுள்ள நாய்களும் இருந்தன. அச்சமவெளிகளிலுள்ள நான்கு பட்டினங்கள் இவைகளுக்கு உணவளித்தன. அந் நாடுகளுக்கு மற்றைய வரிகள் நீக்கப்பட்டிருந்தன |