பக்கம் எண் :

தமிழ் இந்தியா103

பாண்டிய சாதியினர் பெண்களால் ஆளப்படுகின்றனர். அவர்களின் முதல்அரசி கெகுலிசின் புதல்வி எனப்படுகின்றாள். இந்நாட்டிலுள்ள நிசா (Nysa) என்னும் பட்டினமும் ஷ பெயருடைய மலையும் யூபிதர் கடவுளின் பரிசுத்த இடங்கள், இம்மலையிலுள்ள குகையில் பக்கஸ் கடவுள் வளர்ந்தார் என்று இந்தியர் உறுதியாகக் கூறுகின்றனர்.

  செகுலிஸ், தனது புதல்விக்குக் கொடுத்த நாட்டை 365 கிராமங்களாகப் பிரித்து ஒவ்வொரு கிராமத்தையும் முறையே வருடத்தின் 365 நாளும் திறை கொடுக்கும்படி விதித்தார்.1
பக்கஸ்
(Father Bacchus) காலம் முதல் அலக்சாந்தர் காலம் வரையில் பாண்டிநாட்டை ஆண்ட அரசர் 154 பேர். இவர்களின் ஆட்சி் 6431 ஆண்டு 3-திங்கள் நடைபெற்றது.