த்பிரபேன ் என்னும் தீவு இந்தியாவினின்றும் ஒரு சிறிய ஆற்றினாற் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அங்கு இந்தியாவிற் கிடைப்பதிலும் அதிக பொன்னும் முத்தும் கிடைக்கின்றன. அங்குள்ள யானைகள் இந்திய யானைகளிலும் பெரியன. த்பிரபேன் 7000 ஸ்ரேடியா நீளமும், 5000 ஸ்ரேடியா அகலமுமுள்ளது. அங்கு 700 கிராமங்கள்உண்டு. கடல் ஓரங்களில் ஆமைகள் அதிகம். அவைகளில் ஓடு 15 முழநிளம், தாம்பிரபர்ணி என்னும் கடலுள் இருக்கும் இத்தீவில் தென்னைகள் நிரையாக நடப்பட்டிருக்கின்றன. இங்கு யானைகளும் அதிகம். அத்தீவின் மக்கள் அவைகளைப் பிடித்துக் கலிங்க தேசத்துக்கு அனுப்புகின்றனர். கரை ஓரங்களில் வாழும் மக்கள் மீன் பிடித்து வாழ்வர். அக் கடல்களில் சிங்கத்தலை விலங்குத் தலைகளுள்ள மீன்கள் உலாவுகின்றன. பெண்களின் தலையுடைய மீன்களும் அங்கு உண்டு; மயிருக்குப் பதில் முட்கள் காணப்படுகின்றன. இயல் 5 தமிழ்வேந்தரும் அவர் ஆட்சியும், பிற்காலத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளாலும் பட்டயங்களாலும் தமிழிலக்கியங்களிற் காண முடியாத பல அரிய செய்திகள் கிடைக்கின்றன. |