அரச ியல் தொடர்பான தனித்தமிழ்ச் சொற்கள் காணப்படுதலின் அவ் வாட்சி முறை மிகப் பழைமை தொட்டே தமிழ் நாட்டில் நடைபெற்று வருகின்றதெனத் துணியலாம். தமிழ் நாட்டிலே மூவேந்தரது ஆட்சி முறையும் ஒரே வகையாக நடைபெற்றது. எல்லா அதிகாரமும் அரசனுக்கு இருந்தது. அவனுக்கு உறுதி கூறும் அமைச்சர் நகரப் பெருமக்கள் முதலிய சுற்றத்தினர் இருந்தனர். அரண்மனையில் ஏவல்புரிவோர் பலகூட்டத்தினராகப் பிரிக்கப்பட்டிருந்தனர். சமையல் அறை குளிக்கும் அறைகளிற் பெரும்பாலும் ஆடவரே வேலை புரிந்தனர். வேலையாட்கள் வேளம் என்னும் கூட்டத்தினின்றும் தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அவர்கள், போரிற் சிறை பிடிக்கப்பட்டவர்களாவர். சோயுகுவா என்னும் சீனன், சோழர் ஆட்சியைப் பற்றி எழுதுமிடத்துக் குறிப்பிட்டிருப்பது வருமாறு: அரண்மனை விருந்துக் காலங்களில் அரசனும் நான்கு அமைச்சரும் சிங்காசனத்தின் அடியை வணங்குகிறார்கள்; உடனே அங்குக் குழுமியிருப்போர் வாத்தியங்களை ஒலித்து ஆடல் பாடல்களைத் தொடங்குகின்றனர். அரசன் மது அருந்தமாட்டான்; ஊன் அருந்துவான், நாட்டு வழக்கப்படி அவன் பஞ்சு ஆடையை அணிந்துகொண்டு தானிய மாவினாற் செய்த பணியாரங்களை உண்கிறான் உணவருந்தும் அறையிற் சேவிப்பதற்கும் தன்னைச் சூழ்ந்து திரிவதற்கும் அவன் திரளான நடன மாதரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறான். நாள் ஒன்றுக்கு முறை முறையாக அவனைச் சேவிக்கும் பேர் மூவாயிரம் மாதர்1 அரசனுக்கும் தேவிக்கும் தனிச் சேவகம் புரியும் பணியாளரு மிருந்தனர். 1. The Greek girls we know were frequently imported at Barygaza (Brooch) and a guard of Javana women is a stock feature of the Rajahs court in the Indian Dramas - The presence of Greek girls as royal attendance shows that they were commonly found in Rajahs harems-India and the western word-H. G. Rawlinson-pp 47, 170. It is probable that when the importation of Greek women, (who were often employed in the households of Indian chiefs and nobles at a time when greek ladies married Indian princes). language ceased to exist also. The gates of India-p. 22-Colonel-Sir Thomas Holdich. |