பக்கம் எண் :

106தமிழ் இந்தியா

படையில் யானை குதிரை வீரர், காலாள், தேர் வீரர் என்போர் இருந்தனர். யானைவீரர் யானையாட்கள் குஞ்சரமள்ளர் எனவும், குதிரைவீரர் குதிரைச்சேவகர் எனவும், காலாட்படையினர் கைக்கோளப் பெரும் படையினர் எனவும், வில்லாளர் வில்லிகள் எனவும், வாட் படையினர் வாட்பெற்ற கைக்கோளர் எனவும் பட்டனர். யுத்த காலத்தில் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்படும் வீரர். அரசனின் வலங்கை எனப்பட்டனர். நகரங்களில் படை தங்குமிடங்கள் கடகங்கள் எனப்பட்டன. படைகளின் தலைவன் படைத்தலைவன் சேனாபதி அல்லது படைமுதலி எனப்பட்டான். வரி தண்டும் கருமி (மேல் உத்தியோகத்தன்) நாடுவாகை எனப்பட்டான். வரி தண்டும் வேலையில் போர் வீரர்களும் பயன்படுத்தப்பட்டனர். கால்வழியாக வரும் படை மூலப்படை எனப்பட்டது.

  ஷ சீன ஆசிரியன் 12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதியிருப்பது வருமாறு: இவ் விராச்சியத்தில் (சோழ நாட்டில்) பதினாயிரம் யானைகள் நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஏழு அல்லது எட்டு முழம் உயரமுடையது போர் புரியும்போது அவை முதுகின் மீது வீடுகளைக் கொண்டு திரிகின்றன. வீடுகள் நிரம்ப வீரர்கள் இருந்து அம்புகளை எய்கின்றனர்.