பக்கம் எண் :

தமிழ் இந்தியா107

வெற்றியடைந்தபின் யானைகளுக்குக் கௌரவப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. நாளும் அவை அரசனுக்கு முன் கொண்டுவரப் படுகின்றன.

  போரில் கொள்ளை யடிக்கப்படும் பொருள் அரசனுக்குச் சொந்த மானது.

  அரசனது வாய் உத்தரவு திருவாய்க் கேள்வி எனப்பட்டது. அதனைக் கேட்டு எழுதும் கருமிகள் பலர் அவனுடன் இருந்தனர். எழுதுவோன் தீட்டுக்காரன் எனப்பட்டான். அரசன் வழக்குகளை நேரிற் கேட்டு நாட்டு வழக்கப்படி தீர்ப்பளித்தான். பெரிய கருமிகளுக்கு ஏனாதி, மாராயன் என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. மாராயன் என்பதன் பெண்பால் மாராசி. உயர்ந்த கருமிகள் அதிகாரிகள் எனப்பட்டனர். மேல் கீழ் அதிகாரிகளைக் குறிக்கப் பெருந்தரம் சிறுதரம் என்னும் பெயர்கள் வழங்கின. உத்தியோகத்தர் கருமிகள் எனவும், வேலையாட்கள் பணி மக்கள எனவும் கூறப்பட்டனர். நியாயாதி பதிகள் நியாயத்தார் எனப்பட்டனர். ஒரு கிராமத்தின் அல்லது அதன் பகுதியின் கடமைகளைப் பார்க்கும் கருமிகள் உடையார் அல்லது கிழார் எனப்பட்டனர். ஒவ்வொரு கிராமமும் பெருமக்கள் கூட்டங்களால் ஆளப்பட்டது. கிராமங்கள் பல சேர்ந்தது கூற்றம், நாடு அல்லது கோட்டம் எனப்பட்டது. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வள நாடு. வளநாட்டிலும் பெரியது மண்டலம்.

*நாட்டு ஆட்சி


மாசனங்களும் சனங்களும் கூட்டங்களும் அரசியற் கருமங்களை நடத்தின. ஒவ்வொரு கூட்டமும் தனித்தனி ஒவ்வொரு கருமத்தைக்


  It was apparently by way of Euphrates valley that the Indian Village Committees made their way into Europe. It was the descendants of the Latin races who founded the village committees of Italy on the pattern of those of Southern India. In passing from the Hindu to the Assyrian mythology we find another development from the original type of the Dravidian village-committee. The Ruling races of Pre. Historic Times pp 1, 39, 90 - H. E. Hewitt.