பக்கம் எண் :

108தமிழ் இந்தியா

கவனித்தது. கிராமங்கள், சேரிகள், தெருக்கள் என்னும் வகையாகப் பிரிவுகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு தெருவிலுள்ளோரும் தனித்தனிக் கூட்டங்களாகச் சேர்ந்து ஒவ்வொரு கருமத்தைக் கவனித்தார்கள். அறச் சொத்துகளை, மேற்பார்வை செய்தோர் தானத்தார் எனப்பட்டனர். திருக்கோயில்களுக்குள்ள நிலங்களுக்கு வரிகள் நீக்கப்பட்டிருந்தன. கிராமம் அல்லது பட்டினம், ஊர் எனப்பட்டது. ஊர், ஆளன்கணம் என்னும் கணத்தால் ஆளப்பட்டது. ஊர் ஆள்வார் என்பதும் அக்கூட்டத்தின் பெயர். இக் கூட்டத்தின்கீழ் ஊர்வாரியம் என்னும் கூட்டங்கள் இருந்தன. இச் சொல் வாரி (இனம்) என்னும் அடியாகப் பிறந்தது. தனிப்பட்ட கடமைகளைப் பார்க்க இக்கூட்டத்தாரால் அமைக்கப்பட்டோர் வாரியர் எனப்பட்டனர். கூட்டங்களின் காரியக்கூட்ட உறுப்பினர் வாரியப் பெருமக்கள். எனப்பட்டனர். ஊரின் ஒவ்வொரு பிரிவும் குடும்பு (Ward) எனப்பட்டது. ஒவ்வொரு குடும்பிலும் உள்ள உறுப்பினர் குடஓலை வாயிலாகத் தெரிந்தெடுக்கப்பட்டனர்.1 பெரிய குற்றம்


  1. ஒவ்வொரு குடும்பத் தெரிவுக்கும் நிற்பவர்களின் பெயர்கள் ஓலை நறுக்குகளில் எழுதப்பட்டன. மரத்தடியில் அல்லது கோயில் மண்டபத்தே சபை கூடினது. அப்பொழுது கோயிற் குருமாரும் அங்கு வந்திருந்தார்கள். குருமாருள் வயதின் மூத்தவர் குடம் ஒன்றை எடுத்து அதனைக் கவிழ்த்து எல்லோருக்கும் காண்பித்தார். விவரம் அறியாத சிறுவன் ஒருவன் குடும்பினின்றும் வந்த ஓலை நறுக்குக் கட்டு ஒன்றை அவரிடம் கொடுத்தான். அவ்வோலை நறுக்குகள் குடத்திலிட்டு நன்றாகக் குலுக்கப்பட்டன. பின்பு அந் நறுக்குகளில் ஒன்றை அச் சிறுவன் எடுத்து ஐயரிடம் கொடுத்தான். அவர் தம் ஐந்து விரல்களையும் நீட்டினபடி அதனைத் தமது உள்ளங்கையில் வாங்கி அதிலுள்ள பெயரை வாசித்தார்.பின்பு அங்குள்ள மற்ற ஐயர்மாரும் அப்பெயரை வாசித்தனர். இவ்வாறு ஒவ்வொரு குடும்புக்குமுள்ள உறுப்பினர்கள் தெரிந்தெடுக்கப்பட்டனர்.