பக்கம் எண் :

தமிழ் இந்தியா109

மேற்படு குற்றம் எனப்பட்டது. வினைக் கேடு (கெட்ட நடத்தை) உள்ளவர்களுக்கு கைக்கூலி வாங்குவோரும் தண்டிக்கப்பட்டனர். ஊரவர்களிடம் உள்வரி (மறைவாக வாங்கும்வரி) வாங்குதல் ஊர்க்குக்கரவு (துரோகம் செய்தலாகக் கருதப்பட்டது. 1சபை மாசபை என்பன முறையே குறி பெருங்குறி என வழங்கின. உறுப்பினர் பெருமக்கள் எனப்பட்டனர். சபைகள் பெரும்பாலும் கோயில் மண்டபங்களிற் கூடின. சபை பறைசாற்றிக் கூட்டப்பட்டது. சபை கூட்டுவது (சேமக்) கலம் அல்லது இரட்டைக்கலம் தட்டி அறிவிக்கப்பட்டது.

  அரசனது வாய்க்கட்டளை (திருமுகம்) திருமந்திர ஓலை என்னும் கருமியால் எழுதப்பட்டுப் பொத்தகத்திற் புகுத்துமுன் திருமந்திர ஓலை நாயகம் என்பவனால் ஒப்பு நோக்கப்பட்டது. பின்பு ஓலைநாயகம் வரியிழுத்துக் கொள்க எனக் கருமி ஒருவனுக்குக் கட்டளையிட, அது பொத்தகத்திற் புகுத்தப்பட்டுத் தீட்டு
(Document) ஆனது. ஏற்பாடுகள் (ஆவணங்கள்) தொடர்பாகப் புரவு வரி, வரிப் பொத்தகம், முகவெட்டி, வரிப் பொத்தகக் கணக்கு, வரியிழுத்து, கண்காணி, பட்டோலை, நடுவிருக்கை முதலிய கருமிகள் இருந்தார்.


  1. சபைகளுக்கு ஊர் என்னும்பெயரும் இருந்தது. ஊர் என்பதே மிகப் பழையநாட்டு அல்லது கிராம ஆட்சி நிலையாயிருந்தது. பிற் காலத்தில் ஊர், சபை எனப்பட்டது. The suggestion may be made that ur represents in every case the more premitive local organization indigenous to the Tamil country an lineal decendent of the ancient Mantram; and the Sabah was generally a later superimposition-Studies in Chola History and Administration P. 103.