தொழிலாளர்களிடையே வலங்கை இடங்கை என்னும் கட்சிகள் இருந்தன. இடங்கையினர் பிராமணர்களின் மிதியடிகளையும் குடைகளையும் தூக்கிச் சென்றனர். அரசரும் பெருமக்களும் பல மனைவியருடையராயிருந்தனர். மனைவியர் 1உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. வரலாற்றுக் காலத்துக்குமுன்தொட்டு ஆடல் பாடல் மாதர் மிகவும் கவர்ச்சிக்குரியவர்களாயிருந்தார்கள். விழாக்காலங்களில் அவர்கள் வரவு மிகவும் வரவேற்புக்குரியதாயிருந்தது. அவர்கள் ஆடவர்களுடன் தாராளமாகப் பழகினார்கள். அம்பலங்களில் (Rest Houses) தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. வரியும் வருவாயும் அரசனது நிதிநிலையம் தலம் எனப்பட்டது. நிதியிற் பெரும்பாலன, நகைகளாகவும் விலையுயர்ந்த மணிகளாகவும் இருந்தன. அபுசா செட் (Apuza Zed) என்பவன் பத்தாம் நூற்றாண்டில் எழுதியிருப்பது வருமாறு: தங்கத்தில் இரத்தினக்கற்கள் பதித்த குழைகளை இந்திய அரசர் அணிகிறார்கள். அவர்கள் கழுத்தில் இரத்தினம் வைடூரியம் முதலியவைகளாற் செய்த மாலைகள் இலங்குகின்றன. ஆனால், முத்துக்கள் மிகவும் விலையேறப் பெற்றவை. அரசரின் நிதிச் சேமிப்புப் பெரும்பாலும் முத்துக்களாயிருக்கின்றது. அதிகாரிகளும் உயர்ந்த கருமிகளும் அரசன் அணிவதுபோன்ற விலையுயர்ந்த முத்து மாலைகளை அணிகிறார்கள். 1. We know that among many early tribes the wives, slaves horses etc., of chiefs were slain at the tomb that their-ghosts might accompany the spirit of the master and this is the true origin of satte - Syrian stone lore. |