பக்கம் எண் :

112தமிழ் இந்தியா

வரி பெரும்பாலும் இறை எனப்பட்டது. பணம் இறுக்கும்படி விதிக்கப்படும் தண்டனை தண்டம் எனப்பட்டது. ஆயம் என்னும் சொல்லும் இறை என்னும் பொருளில் வழங்கிற்று. அரசனது வாயில் திருக்கொற்றவாயில் எனப்பட்டது.

  மத்திய அரசைச் சேரவேண்டிய நிலவரிக்குக் கிராம சபைகள் பொறுப்பாயிருந்தன. வரிகள் நில விளைவுகளிலிருந்தும் பிற வகைகளிலிருந்தும் வாங்கப்பட்டன. *வெட்டி என்பது கூலி இல்லாத கட்டாய வேலை. நகரவரி (ஊரிடுவரி,) ஏரிவரி, வேதனைவரி (அணைகட்டும் கட்டாய வேலை), சிலவரி, மகன்மைவரி, பேர்வரி
(Poll Tax), கார்த்திகை யரிசி, கார்த்திகைப் பச்சை (காசு ஆயம்), கடை இறை, படிகாவல், நகர்காவல் எனப் பல வரிகள் இருந்தன.

  வரி கொடாதாரைத் தண்ணீரிலிட்டும் வெயிலில் நிறுத்தியும் வேதனைகொடுத்தும் சிலநேரங்களில் வரி வாங்கப்பட்டது.


வாணிகம்


  வியாபாரத்தின் பொருட்டு மக்கள் இடங்கள் தோறும் சென்றார்கள். பெரிய தெருக்கள் பெருவழி எனப்பட்டன. பண்டங்கள் கழுதை, பொதிமாடு, எருமைகளில் கொண்டு போகப்பட்டன. பணம் கடன் கொடுத்தவர், வாங்கியவரிடத்திற் பெறும் சீட்டு
(Pronote) கையெழுத்தோலை எனப்பட்டது. தமிழ் வியாபாரிகள் மலாயத் தீபகற்கம், இந்து சீனம், சீனா முதலிய நாடுகளுக்குச் சென்றனர். மாவலிபுரம், காவிரிப்பூம்பட்டினம், சாலியூர், கொற்கை முதலியன கிழக்கிலும், கொல்லம் மேற்கிலும் பெரிய வியாபாரப்


  *இலங்கையிற் கூலியின்றி அரசினர்பொருட்டுச் செய்யப்பட்ட கட்டாயவேலை இராச காரியம் என்று வழங்கிற்று.