பக்கம் எண் :

தமிழ் இந்தியா113

பதிகளாயிருந்தன. இலங்கை நக்கவாரம் (Nicobars) இலக்க தீவு, மாலை தீவுகள் மேற்கிலும், கப்பல்கள் தங்குதற்கு ஏற்ற இடங்களாயிருந்தன. சீன நாவாய்கள் மலையாளக்கரையிலுள்ள கொல்லம்வரையிற் சென்றன. அராபியாவிலிருந்து குதிரை வியாபாரிகள் குதிரைகளைக்கொண்டு வந்தனர்.
அடிமைகள்

  அக்காலத்தில் பணத்துக்கு விற்று வாங்கப்படும் அடிமைகள் இருந்தார்கள். உயர்குலத்தவர்களும் சில சமயங்களில் அடிமைகளாக வந்தார்கள். இவர்கள் பெரும்பாலும் தம்மைக் கோயில்களுக்கு விற்றார்கள். அடிமைகளை விற்று வாங்குவதற்கு அரசியல் ஆவணங்கள் எழுதப்பட்டன. கோயில்களுக்கு விற்கப்படும் பெண்கள் தேவராட்டியர் எனப்பட்டனர். வேலையாட்களுக்குக் கூலி தானியங்களாகவே கொடுக்கப்பட்டது.


கிராமம்

  கிராமங்களில் மக்கள் எளியவாழ்க்கை நடத்தினர். பண்ணைக்காரன் அல்லது நிலம் வைத்திருப்போன் மேலான நிலைமையில் இருந்தான். கிராம சபைகள் பெரும்பாலும் நிலம் வைத்திருக்கும் பெருமக்களின் கூட்டமாயிருந்தது. கிராமங்களைச் சுற்றிச் சில பகுதிகள் ஊர்ப் பொதுவாகவிருந்தன. வரி யிறுக்கும் மக்கள். கிராம ஆட்சியில் பெரும் பங்கு பற்றினர். ஒவ்வொரு கிராமத்திலும் கால்வழியாகவரும் வேலையாட்கள் இருந்தனர். சேக்கிழார், பெரிய புராணத்தில் நந்தனாரைப்பற்றிக் கூறும் பகுதி, அக்காலக் கிராமவாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகும். தானியம் சேர்த்து வைக்கப்படும் இடம் கொட்ட காரம் எனப்பட்டது. நிலம் செய்வோன் காணியாகனுக்குக் கொடுக்கும் பாகம் மேல்வாரம் எனப்பட்டது.
த. இ.-II--8