பக்கம் எண் :

114தமிழ் இந்தியா

அளவைகள்

  நிலங்கள் கோலால் அளக்கப்பட்டன. ஒரு கோல் 16 சாண்; 18 கோல் கொண்டது ஒரு குழி; 256 குழி கொண்டது ஒரு மா; 20 மா கொண்டது ஒரு வேலி. இடங்கள் தோறும் குழி அளவு மாறுபட்டது.

  ஆண்டு 360 நாட்களாகவும், சில காலங்களில் 365-நாட்களாகவும் கணக்குச் செய்யப்பட்டது.

தானிய அளவை


  2 செவிடு ஒருபிடி; 5 செவிடு ஓர் ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி ஒரு நாழி; 8 நாழி ஒரு குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 2 பதக்கு ஒரு தூணி அல்லது காடி; 3 தூணி ஒரு கலம்.

பொன் அளவை


ஒரு மஞ்சாடி 2 குன்றி; 1 குன்றி 5 மா; 1 மா நாலு காணி; (ஒரு மஞ்சாடி = 2 குறுணி = 10 மா = 40 காணி) 20 மஞ்சாடி ஒரு கழஞ்சு (68 முதல் 72 தானிய எடை;) மா 1/20 யும் காணி 1/80 யும் குறிக்கும். பணஎடை என்பது 1/10 கழஞ்சு.


நீட்டலளவை

8 தோரை (தானியம்) ஒரு விரல்; 12 விரல் ஒரு சாண்; 2 சாண் ஒரு முழம்.
 

பள்ளிக்கூடங்கள்

முற்காலம் பள்ளிக்கூடங்கள் மரத்தடி, கோயிற்சாலை அல்லது மடங்கள் அல்லது உவாத்தியாபர் வீட்டுத் திண்ணையிற் கூடின. பேர் பெரிய


1. The Hindu Temples were fortresses treasures, court-houses, parks, fairs, exhibition sheds, halls of learning and pleasure all in one - Studies in Chola History and Administration-P. 115.