பாத்திரங்களும் வெள்ளி தங்கம் என்பவைகளாற் செய்யப்பட்டவை, நாடோறும் காலையில் மருத்துவன் அரசனது உடல் நிலையைச் சோதித்து அதற்கேற்ற உணவுகளைச் சமைக்கும்படி பட்டோலை எழுதிச் சமையலறைத் தலைவனிடம் கொடுத்தான். உணவு சமைத்ததும் அரசன் உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சமையலறைத் தலைவனுக்குச், சமைத்த எல்லாவகை உணவிலும் சிறிது சிறிது எடுத்துக் கொடுக்கப்பட்டன. அவன் உண்டு ஒருமணி நேரத்துக்குப்பின் அரசன் உணவு அருந்தினான். அக்கால அரசர் உணவில் நஞ்சு இடப்படுவதைக் குறித்துப் பெரிதும் அஞ்சினர்.1 அரசனுக்கு சோறும் நூறு (பல) வகையான கறிகளும் சமைக்கப்பட்டன. அரசன் அவைகளுட் சிலவற்றை மட்டும் கொண்டு வரும்படி செய்து உண்டான். அவனுக்குச் சமயலறையில் சேவிப்போரெல்லோரும் வாயைத் துணியாற் கட்டி யிருந்தனர். பெரியோர்க்கு முன் கை கட்டி வாய் புதைத்து நிற்றல் என்பன பழைய மரபுகள். இன்றும் கதிர்காமத் திருக்கோயிலிற் பூசை செய்யும் சிங்கள குருமார் பூசை நேரத்தில் தமது வாயைத் துணியாற் கட்டிக்கொள்வர். புரோகிதன், அரசன் வெளியே செல்வதற்கும் பிற கருமங்களைச் செய்வதற்கும் நல்ல நேரம் அறிந்து கூறினான். அரசனைக் காணச் செல்வோர் அவனைப் பார்த்தபின் சிறிது தூரம் பின் நோக்கி நடந்து சென்று 1. The kitchen is carefully guarded and is constructed in a secret place. The food for the king is tested by a multitude of testers. Examination is made of any traces of poison found in the viands and the demeanor of the tasters; medicines to the king must pass similar tests. Servants in Charge of the kings dresses and toilets must appear bathed and in washed clothing to receive the toilet requisites daily sealed from the body in charge of the same, before applying them on the king - Chandragupta Maurya and his time - R. K. Mookerji. |